உலகம்

நிர்மாண சிறப்பு 2018-தேசிய விருதுகள் : துடாவே பிரதர்ஸ் நிறுவனத்துக்கு இரு சிறப்பு மற்றும் ஒரு கௌரவ விருது

ஏழரை தசாப்த காலமாக தரமான நிர்மாண வடிமைப்புகளை வழங்கும் இலங்கையின் முன்னணி கட்டட நிர்மாண நிறுவனமான துடாவே பிரதர்ஸ் (பிரைவட்) லிமிடெட், 2018 தேசிய நிர்மாணச் சிறப்புகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு நிர்மாணச் சிறப்பு மற்றும் ஒரு கௌரவ விருது ஆகியவற்றை தனதாக்கியிருந்தது.


நிர்மாண தொழிற்துறை அபிவிருத்தி அதிகார சபை (CIDA), வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சுடன் இணைந்து இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

உள்நாட்டு நிர்மாணத்துறையை ஊக்குவிப்பது மற்றும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தேசிய அமைப்பாக திகழும் நிர்மாண தொழிற்துறை அபிவிருத்தி அதிகார சபை, நிர்மாண ஒப்பந்தக்காரர்களை வகைப்படுத்தல் ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வது மற்றும் துறைக்கு மூலோபாயம் மற்றும் ஆலோசனைகளை வழங்குவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன்ரூபவ் இதர நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு மேலதிகமாகரூபவ் நிறுவும் நடவடிக்கைகளிலும் உதவிகளை வழங்கி வருகிறது.

ஹவ்லொக் டவுன் பகுதியில் நிறுவியிருந்த பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் அலுவலக கட்டிடம் மற்றும் தம்புளையில் நிறுவிய ஜெட்விங் லேக் லக்ஷரி ரிசோர்ட் ஆகியவற்றுக்காக சிறப்பு விருதுகளை துடாவே பிரதர்ஸ் தனதாக்கியிருந்தது.

இதனூடாக, நிர்மாணத்துறையை பொறுத்தமட்டில் சந்தையில் காணப்படும் முன்னோடி எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.

மேலும், ஒருகொடவத்தை பகுதியில் முன்னர் காணப்பட்ட வாகனங்கள் பொறியியல் பயிற்சி நிலையத்தை புதிய பகுதியில் மீள நிர்மாணத்திருந்தமைக்காக கௌரவ விருதும் வழங்கப்பட்டிருந்தது. இந்த வருடாந்த விருதுகள் வழங்கலில் முன்னரும் இந்நிறுவனம் பல விருதுகளை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர் சபை அங்கத்தவர்களும், ஊழியர்களும் குறிப்பிடுகையில்,
“அண்மையில் நாம் பூர்த்தி செய்திருந்த திட்டங்களுக்காக இரு சிறப்பு விருதுகள் மற்றும் மெரிட் விருது ஆகியவற்றை நாம் பெற்றுக் கொண்டதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். எமது வாடிக்கையாளர்கள், ஆலோசகர்கள், விநியோகத்தர்கள், நிறுவனங்கள், ஊழியர்கள், அரசாங்கம் மற்றும் இதர சகல பங்காளர்களுடன் இந்த தொடர் வெற்றியை பகிர்ந்து கொள்கிறோம்.” என்றனர்.

தரமான நிர்மாணம் மற்றும் சேவைகளை உரிய காலத்தில் பூர்த்தி செய்து வழங்குவதில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ள துடாவே பிரதர்ஸ், போட்டிகரமான விலையை பேணி வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு வகையான கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்கி வருகிறது. நெடுஞ்சாலைகள், பாலங்கள், நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு, விவசாயம் மற்றும் வெள்ள நீர் வடிகாலமைப்பு போன்றன இவற்றில் அடங்குகின்றன.

சர்வதேச கட்டளைகள் நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்ட முகாமைத்துவ கட்டமைப்பின் பிரகாரம் சான்றளிக்கப்பட்ட செயற்பாடுகளை பின்பற்றும் இலங்கையின் முதலாவது நிர்மாண நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது.
நிர்மாண செயற்பாடுகள் மற்றும் ரெடி மிக்ஸ் கொங்கிறீற் உற்பத்தி போன்ற செயற்பாடுகளுக்கு 1996 ஆம் ஆண்டில் DNV இனால் கௌரவிக்கப்பட்டிருந்தது.

திரு. துடாவே கருத்துத் தெரிவிக்கையில்,

“நிர்மாண செயற்பாடுகளில் முன்னோடியாக திகழ்வதுடன், சிவில் பொறியியல் செயற்திட்டங்களிலும் நிறுவனம் தன்னை ஈடுபடுத்திய வண்ணமுள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றன உயர்வடைந்து செல்லும் நிலையில், இந்தத் துறை மிகவும் உறுதியான எதிர்காலத்தை கொண்டதாக அமைந்துள்ளது.” என்றார்.

துடாவே பிரதர்ஸ் நிறுவனத்தின் கீழ் மூலோபாய வியாபார அலகாக இயங்கும் தொழிற்துறை சேவைகள் பிரிவினால், நிர்மாண பிரிவுக்கு மூலப்பொருட்கள் விநியோகம், ரெடி மிக்ஸ் கொங்கிறீற் அஸ்பால்ட் கொங்கிறீட் போன்றவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காணப்படும் உற்பத்தி கொள்திறன், உள்ளக கேள்வியை விஞ்சியதாக அமைந்துள்ளதுடன், மேலதிக உற்பத்தி வெளித்தரப்பினருக்கு போட்டிகரமான விலையில் விநியோகிக்கப்படுகின்றன.

1942 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட துடாவே பிரதர்ஸ், இலங்கையின் முன்னணி பொறியியல் நிர்மாண நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் Chartered Institute of Builders இனால் ‘Chartered Building Company’ என சான்றளிக்கப்பட்ட ஒரே உள்நாட்டு நிர்மாண நிறுவனமாகவும் திகழ்கிறது. ISO 9001: 2015, ISO 14001: 2004 மற்றும் OHSAS 18001: 2007 சான்றிதழ்களை தன்வசம் கொண்டுள்ளதுடன், OHSAS 18001: 2007 சான்றிதழை ISO 45001: 2018 தரத்துக்கு உயர்த்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்த நிறுவனம் தற்போது முன்னெடுத்த வண்ணமுள்ளது.

Hot Topics

Related Articles