உலகம்

Panoramic திரையுடன் அறிமுகமாகவுள்ள புதிய OPPO F11 Pro

OPPO இன் புகழ்பெற்ற F தொடரில் புதிய அறிமுகமாக கவர்ச்சிமிக்க முழுத்திரை வசதியுடன் கூடிய OPPO F11 Pro இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

F தொடர்கள் மற்றும் மெல்லிய கிரேடியன்ட் F9 வடிவமைப்பு ஆகியவற்றின் மிகச்சிறந்த செல்ஃபி செயல்பாட்டிற்கு மேலதிகமாக, F11 Pro இல் பல்வேறு புதுமையான தொழில்நுட்பங்களும், பயன்படுத்துநர்களுக்கு மிகவும் சௌகரியமானதும், இடையூறு அற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் 48MP ultra-clear முறைமை மற்றும் rising கமரா ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆடம்பரமான இயற்கை அழகிற்காக பரந்தளவிலான திரை (Panoramic Screen) மற்றும் இயற்கையான கிரேடியன்ட் வடிவமைப்பு டாவின்சி ஒருமுறை, “எளிமை என்பதே நேர்த்தியின் இறுதி வடிவம்” எனக்கூறினார். முடிந்தவரை எளிமையாகவும், நெறிப்படுத்தப்பட்டதாகவும் அமைந்துள்ள F11 Pro இனை விபரிப்பதற்கு இவ்வார்த்தைகள் பொருந்தும்.

அதியற்புதமான பரந்தளவிலான திரை என்பது முன்பக்க கமராவின் ‘பிளவினை’ மறைத்து கவர்ச்சிகரமிக்க முழுத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பாரம்பரிய கைபேசிகளுடன் ஒப்பிடுகையில், இது 6.53 அங்குல திரை மற்றும் விசாலமான படங்களை காட்சிப்படுத்தும் வகையில் 90.9% விகிதம் வரையிலான திரை தோற்றம் மற்றும் கண்கவர் பொழுதுபோக்கு மற்றும் கேமிங் அனுபவங்களுக்கான விஸ்தீரணமான இடப்பரப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

கைபேசி விளையாட்டு விரும்பிகள் மற்றும் திரைப்பட விரும்பிகளுக்கு விருந்தாக அமையவுள்ள புதிய திரை வடிவமைப்புடன் கூடிய OPPO F11 Pro மாதிரியானது இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளது.

இளம் தலைமுறையினரின் விருப்பத்துக்குரிய கமரா கைபேசியான OPPO ஆனது, எப்போதும் இளைஞர்களுக்கு தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள உலகையும் குறித்தான கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கும் வகையிலான புதுமையான கைபேசிகளையே வழங்கி வருகிறது.

ஸ்மார்ட்ஃபோன் புகைப்படக்கலையில் மிகப் பிரபல்யமான சாதனமான OPPO ஆனது, தொடர்ச்சியாக புதுப்பிக்கக்கூடியதும், முன்பக்க கமராவையும் மிகச்சிறந்த செல்ஃபி தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் வகையில் செல்ஃபி செயல்பாடுகளை முதல்முறை உருவாக்கிய பெருமையை தன்வசம் கொண்டுள்ளது.


செல்ஃபியில் ஏற்பட்ட புத்தாக்கமானது,OPPO இனை ‘செல்ஃபி நிபுணர்’ ஆகவும், உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் உருவாக வழிவகுத்தது. இந்த கைபேசியின் அபரிமிதமான செல்ஃபி புகைப்படக்கலையானது, வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குவதோடு மட்டுமல்லாது, OPPO இன் மரபினை மேம்படுத்துவதுடன், “செல்ஃபி நிபுணர்’ ஆகவும் நிலைப்படுத்திக்கொள்ள வழிவகுத்துள்ளது.

OPPO ஆனது, தொடர்ச்சியாக புதுமைகளை மேற்கொண்டு மிகச்சிறந்த முடிவுகளுடன் கூடிய முதலாவது Dual Rear கமராவினைக் கொண்ட F9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச்சிறந்த Dual Rear கமரா மற்றும் உருவப்பட தொழில்நுட்பத்துடன் உருவாகக் ப்பட்டுள்ள F9 தொடரானது, F தொடரினை மென்மேலும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், கைபேசிகளை மேம்படுத்தி, OPPO இனை ‘செல்ஃபி நிபுணர்’ இலிருந்து ‘அதியுன்னத உருவப்படம்’ இனை நோக்கி தரமுயர்த்தியுள்ளது.

கைபேசிகள் என்பன வெறும் தொடர்பாடலுக்குரிய சாதனமாக மட்டுமன்றி, ஒரு கலை வடிவம் என்பதில் OPPO எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. F11 தொடர்களின் மினுமினுப்பான கிரேடியன்ட் தோற்றம் மற்றும் மிகச்சிறந்த panoramic திரை இந்த நம்பிக்கையையும், “இயற்கையான உருவாக்கம்’ ஆனது முன்மாதிரியான வடிவமைப்பையும் சான்றுபகருவதாக அமைந்துள்ளது.

மேற்கூறிய அம்சங்களுக்கு மேலதிகமாக, OPPO F11 தொடர் மூலமாக பயனரின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் அதிகமாக சூடாகுதல், பின்தங்கியதன்மை மற்றும் பற்றரி ஆயுள் ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களின் பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hot Topics

Related Articles