அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இரு அணிகளும் 2-2 என்று தொடரில் சமநிலைபெற்றுள்ள நிலையில் தொடரை யார்வெல்லப்போவதென கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 2 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரை அவுஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
5 ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்றது.
ராஞ்சியில் நடந்த 3ஆவது போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 4 ஆவது ஆட்டத்தில் 4 விக்கெட்டிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று புதன்கிழமை நடக்கிறது.
இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? அவுஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் வென்று இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. மோசமான பீல்டிங்கால் வாய்ப்பு பறிபோனது. 358 ஓட்டங்கள் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் இன்று முழு திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலிய வீரர்கள் தமது பலத்தை மேலும் நிரூபிப்பார்கள்.
இந்தியாவுக்கு தொடக்க வீரர் தவான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது சாதகமானதே. கடந்த பேட்டிங்கில் அவர் 143 ஓட்டங்கள் குவித்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதேபோல ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, விஜய்சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றம் செய்தும் பலன் இல்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 பேட்டிங்கிலும் பனிப்பொழிவு வெற்றி- தோல்வியை முடிவு செய்தது. கேப்டன் கோலி இதை சரியாக கணிக்காமல் தவறான முடிவை எடுத்தார். இதனால் டெல்லி போட்டியில் அவர் ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
20 ஓவர் தொடரை வென்றது போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் வேட்கையில் அவுஸ்திரேலிய அணி கங்கணம் கட்டியுள்ளது.
கடந்த பேட்டிங்கில் டர்னரின் அபாரமான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. மேலும் உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் சிறப்பாக உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழும் அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் இன்று மோதுவது 136 ஆவது போட்டி ஆகும் இதுவரை நடந்த 135 பேட்டிங்கில் இந்தியா 49 இல் அவுஸ்திரேலியா 76 இல் வெற்றிபெற்று உள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.