உலகம்

JASTECA விருதுகள் 2018 ; Emjay இன்டர்நஷனல் மற்றும் Penguin Sportswear பிரைவட் லிமிடெட்க்கு 5 விருதுகள்

Emjay இன்டர்நஷனல் மற்றும் Penguin Sportswear பிரைவட் லிமிடெட் ஆகியன இலங்கையில் ஆடை உற்பத்தியில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாக திகழ்வதுடன், அண்மையில் இடம்பெற்ற JASTECA விருதுகள் 2018 வழங்கும் நிகழ்வில் ஐந்து விருதுகளை வென்றிருந்தது.

Brandix லங்கா லிமிடெட் பணிப்பாளர் அஸ்லம் ஒமர் வெண்கல விருதை, பன்வில, Penguin Sportswear பிரைவட் லிமிடெட் செயற்பாட்டு முகாமையாளர் அசோக வீரவன்னியிடம் கையளிக்கிறார். JASTECA தலைவர் நிமல் பெரேரா மற்றும் JASTECA விருதுகள் சிரேஷ்ட பதில் தலைவர் மற்றும் தலைவரான காமினி மாரம்பே ஆகியோரும் அருகில் காணப்படுகின்றனர்.

ஜப்பான்-இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தினால் 23 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக Brandix லங்காலிமிடெட் பணிப்பாளர் அஸ்லம் ஒமர் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமாகலந்து கொண்டார்.

பன்வில, Penguin Sportswear நிறுவனம் வெண்கல விருதை வென்றதுடன், கரந்தகொல்ல மற்றும் பாயாகல Emjay இன்டர்நஷனல் மெரிட் விருதுகளை சுவீகரித்திருந்தது. பல்லேதலவின்ன Penguin Sportswear மற்றும் தல்தெனியEmjay இன்டர்நஷனல் ஆகியன ஒழுக்கபூர்வமான செயற்பாட்டுக்காக சான்றிதழை பெற்றுக் கொண்டன.

Emjay-Penguin தமது ஊழியர்கள் தொடர்பில் பெருமை கொள்வதுடன் அனைவரையும் குடும்பமாக நடத்துகின்றது.நிறுவனத்தின் கலாசாரத்தில் ஈடுபாடு, மதிப்பு, நேர்மை, ஒழுக்கம், கரிசனை, குழுநிலை செயற்பாடு மற்றும் நம்பிக்கை போன்ற பெறுமதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

பெறுமதி வாய்ந்த அனுபவம் மற்றும் ஈடுபாடு போன்றன பரிபூரண வாடிக்கையாளர் தன்னிறைவை உறுதி செய்வதுடன், கடந்த ஆண்டுகளில் Emjay-Penguin நிறுவனத்தை வெற்றிகரமான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியாக அமைந்திருந்தது.

விருதுகளுடன் Emjay-Penguin அணியினர் காணப்படுகின்றனர்.

தனியார் மற்றும் பொதுத் துறைகள் மத்தியில் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் வகையில், JASTECA இனால் 5S, Kaizen மற்றும் Lean நிர்வாக கொள்கைகள் இலங்கையில் அறிமுகம் மற்றும் செயற்படுத்தல் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் வெவ்வேறு முக்கியமான பாகங்களில் ஐந்து தொழிற்சாலைகளை கொண்டுள்ளதுடன், 400,000 சதுர அடி பரப்பில் உற்பத்தி பகுதியை கொண்டுள்ள Emjay-Penguin, தன்வசம் 4500 ஊழியர்களை கொண்டுள்ளது. நாளாந்தம் 200,000 ஆடைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் 12 வர்த்தக நாமங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

Emjay-Penguin, இனால் உறுதியான வாடிக்கையாளர் பங்காண்மைகள் மற்றும் நிபுணத்துவம் போன்றன பேணப்படுகின்றன. இவற்றுக்கு கௌரவிப்புகள் கிடைத்துள்ளதுடன், செயற்பாடுகள், நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு போன்றவற்றினூடாக நிறுவனம் போட்டிகரமான அனுகூல நிலையை எய்தியுள்ளது.

இதன் சான்றளிப்புகளில் Worldwide Responsible Accredited Production (WRAP), Garments Without Guilt (GWG), Supplier Ethical Data Exchange (SEDEX), Better Cotton Initiative (BCI), Global Organic Textile Standard (GOTS), Intertek’s Global Security Verification (GSV), Organic Content Standard (OCS) மற்றும் ISO 9001:2005 ஆகியன அடங்கியுள்ளன.

Hot Topics

Related Articles