இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் (SLTB) அதன் மூலோபாய வர்த்தக குறியீட்டு அடையாளத்தை பேர்லினில் இடம்பெற்ற 52 ஆவது ITB இன் மூலம் “So Sri Lanka” என்ற கருப்பொருளை உருவாகியது.
ITB இன் மார்ச் 7 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, SLTB சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட ஆவண திரைப்படம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
எண்மான முறையிலான ஆவண திரைப்படம் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.
ஜேர்மனியின் முன்னணி செய்தி சேவை முகவரான DPA, Die Welt (தேசிய செய்திதாள்), N24 செய்தி நிலையம் உள்ளிட்ட 80 பிரபல ஊடகவியலாளர்கள் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றுலா,வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க,
“ இலங்கை ஒரு பரிமாணம் பெற்ற சுற்றுலா சந்தை என தெரிவித்தார். கடந்த 10 ஆண்டு காலப்பகுதியினுள் இலங்கைக்கு வருகை தருபவர்கள் மற்றும் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நிலையான வளர்ச்சியை கண்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மிக முக்கியமாக இலங்கை சிறந்த சுற்றுலாத் தலம் என்பது நன்கு மெய்யுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணிகளாக இலங்கையின் பாரம்பரியம், உணவு வகைகள் இயற்கையான நில அமைப்பு, எமது கட்டட கலை, எமது கலாச்சாரத்துடன் எமது மக்களின் வரவேற்புத் தன்மை என்பனவற்றை கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவத்தை பெறுவதற்காக இலங்கைக்கு வருகை தரும்படி நாம் வேண்டுகிறோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
SLTB இன் தலைவர் கிஷூ கோமஸ் கருத்து தெரிவிக்கையில்,
“உலகின் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மையை இலங்கை கொண்டுள்ளது. இலங்கை வரும் பயணிகள் என்னவெல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதனை குறிகோளாக கொண்டு செயல்படுகிறோம். எமது அற்புதமான வனஜீவராசிகள் குறித்து அவர்களுக்கு சிறந்த அறிவுறுத்தலை வழங்குகின்றோம்.
இது தவிர, ஆபிரிக்காவிற்கு வெளியே இலங்கையின் சவாரி பயண தலமாக இலங்கை திகழ்கின்றது. இது தவிர வருடத்தின் எந்த காலப்பகுதியிலும் சிறப்பான சூரிய ஒளியை கொண்டுள்ள எமது கடற்கரைகள் திகழ்கின்றன.
இது தவிர விருந்தோம்பல் செயல்பாட்டை கொண்டுள்ள எமது வரவேற்பு மற்றும் எமது சுவை மிக்க நறுமணமான உணவு வகை என்பன அவர்களை கவருகின்றன. ஏனைய எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான அம்சங்களை கொண்ட இலங்கையின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கு வருகை தருமாறு பயணிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பூகோள ரீதியாக பயணிகள் மத்தியில் தெரிவு செய்யப்பட்ட இடமாக இலங்கையின் சுற்றுலாத் திட்டம் ஒரு பார்வையில் உள்ளதாக கோமஸ் மேலும் தெரிவித்தார்.
மிகவும் ஆக்ரோஷமான மற்றும் லட்சியத்தைக் கொண்ட சந்தைப்படுத்தல் திட்டத்தை ஆதரிக்கும் ஒர மூலோபாய ரீதியாக சக்திவாய்ந்த பெருக்காற்றத்தை நாம் ஆதரித்து வருகிறோம். இலங்கையின் தனித்துவமான முத்திரை மூலம் எம்மால் பயணிகளுடன் நெருங்கிய தொடர்பினை ஸ்தாபிக்க முடிந்துள்ளது.
“So Sri Lanka” இலங்கையின் இலக்கை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்துவதுடன்; தனித்துவமான பல்வேறு சேவைகளும் உள்ளடங்குகின்றன.
“So Sri Lanka” (எனவே ஸ்ரீலங்கா) விளக்கமளித்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற துடிப்பான குணங்களுக்கும் அப்பால் தனது பரிமாணங்களை கொண்டுள்ளது. மற்றும் இது உள்நாட்டு மற்றும் பலவித தோற்றப்பாட்டை கொண்ட பயணிகளால் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலான வெளிப்பாட்டை கொண்டுள்ளது.
சீனாவில் இருந்து முதன் முறையாக பயணிப்பவர் அல்லது பிரித்தானியாவில் இருந்து நான்காவது முறையாக மீள வரும் விருந்தினர்ரூபவ் இந்தியாவில் இருந்து வரும் திருமணத்தைத்தை நடத்துவதற்கான ஜோடி, ஜேர்மனியில் இருந்து வரும் குடும்பம் ஒன்று அல்லது பிரான்சை சேர்ந்த புதிய தலைமுறையினர் என எவராக இருந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜே. வால்டர் தொம்சனின் தலைமை நிறைவேற்று அதிகாரி திருமதி அலைனா ஹாஜி ஒமார் விளக்கினார்.
“So Sri Lanka” வின் குறிகோள் பெருமைக்குரிய குணநலன்களை பெறுவதற்கு ஏற்ற வகையில் ஊக்குவிக்கும் அதேசமயம் தொடர்ந்தும் முன்னேற்றத்தையும் மேம்பாட்டு தன்மையையும் கொண்டுள்ளது.
நாம் செயலற்ற அடையாளத்தில் முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளோம். நாம் சமூக ரீதியான எண்மான பயணிகளுடனேயே கலந்துரையாடுவதில் ஈடுபாட்டுடன் செயல்படுகிறோம். “So Sri Lanka” பல தொன்மையான மனப்பான்மை உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் செயல்பாட்டை கொண்டுள்ளது. அத்துடன், எமது செயல்பாடு இயற்கையானது, எமது செயல்பாடு வண்ணமயமானது என்பதுடன் அற்புதமானது என்பதே “So Sri Lanka” என ஓமார் விபரித்தார்.