உலகம்

இடைக்கால நிவாரண திட்டத்திற்கு காணாமல்போனோர் அலுவலகம் வரவேற்பு

வரவு – செலவுத் திட்டத்தில் இடைக்கால நிவாரணம் உள்ளடக்கப்பட்டிருப்பதை காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வரவேற்கின்றது.


2019 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 5 ஆம் திகதியன்று அரசாங்கம் தனது வரவு செலவு திட்ட அறிக்கையில் 500 மில்லியன் ரூபாய்களை காணாமற்போன ஆட்களது குடும்பத்தாருக்கும் ஆயுதப்படை மற்றும் பொலிஸ்துறையில் “சேவையின்போது காணாமல்” போயிருப்போரின் குடும்பங்களுக்கும் மாதத்திற்கு ரூபா 6,000 வீதம் உதவிட நிதி ஒதுக்கியுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் முன்மொழிந்திருப்பதுபோல “நிவாரணம் வழங்கும் அலுவலகமானது” இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்வரை இந்நிவாரணமானது “காணாமல் போன சான்றிதழ்” பெற்றவர்களுக்கு வழங்கப்படும். கடந்த 2018 ஆவணி மாதம ; நாம் வெளியிட்ட எமது இடைக்கால அறிக்கையின் பரிந்துரையின்படி இம் முன்மொழிவு 2019 வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) வரவேற்கிறது.

இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுவதுடன் இந்நிகழ்ச்சி திட்டமானது ஆயிரக்கணக்கான காணமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கும் விரிவாக்கப்படுவதையும் OMP தன் கண்ணோட்டமாக கொண்டுள்ளது.

தனது இடைக்கால அறிக்கையில் காணாமல் போன / சேவையின் போது காணாமல் போன ஆட்களின் நிரந்தர, வருமானமற்ற, வேறு பாதிப்புக்களுக்குள்ளாக்கப்பட்ட மனைவி, குழந்தை / குழந்தைகள் அல்லது/ உடன் உயிரோடிருக்கும் பெற்றோர் / பெற்றோர்களுக்கு ஜீவனோபாயமாக மாதாந்தம் ரூ 6,000 நிதியுதவி வழங்க வேண்டும் என OMP பரிந்துரை செய்தது மாதாந்த நிவாரணம் வழங்கப்படுவதற்கு “காணாமற் போன சான்றிதழ்” நிபந்தனையாக்கப்பட்டுள்ளதில் உள்ள சவால்களை OMP அவதானிக்கின்றது. “காணாமற் போன சான்றிதழ்” வழங்கப்படுவதற்கான வழிமுறைகளை பெற்றுத்தந்திடுவது OMP யின் சட்டபூர்வ பொறுப்பு என்பதால் அதற்கான புரிந்துணர்வினை அதிகரித்து குடும்பங்கள் காணாமற் போன சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கி வருகிறது.

காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் காணாமற் போனோர் சான்றிதழைப் பெறுவதைத் தடுக்கும் சவால்களை இனம் கண்டறிந்துள்ள OMP யானது அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றி காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட இதரர்களின் குடும்பங்களுக்கு வேறு வழிகள் மூலம் ஆவணங்களை பெறுவதற்கும் உறுதிப்படுத்துவதற்காகவும் செயற்படும்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது கடன் தீர்வு, வீடமைப்பு, கல்வி, தொழிற்கல்வி,வாழ்வாதார அபிவிருத்தி, தொழில் போன்ற துறைகளில் இடைக்கால நிவாரணம் வழங்கிட இதரபரிந்துரைகள் செய்திருந்தது. அப்பரிந்துரைகளில் ஒன்றாக ‘என்ரபிரைஸ் சிறி லங்கா’ என்பது போன்ற நிதியுதவி மற்றும் கடன் வழங்கும் திட்டங்களில் இக்குடும்பங்களை உள்ளடக்கி அவை பொருளாதார தன்னிறைவு பெறச் செய்வதாகும். 2019 ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தம் குடும்பங்கள் “என்ரபிரைஸ் சிறி லங்கா கடன் திட்டத்தில் முன்னுரிமை நுழைவு தரப்பட்டுளளமையை OMP வரவேற்கின்றது.

தேசிய ஒருமைப்பாட்டு அலுவலகத்தினால் ஒருங்கிணைக்கப்படுகின்ற வாழ்வாதாரத் திட்டங்களில் (ONUR)இணையுமாறு குடும்பங்கள் வேண்டப்படுகின்றன. 2018 ஆவணியில் தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த பின் OMP இடைக்கால நிவாரணமும் நீதியும் என்ற ஒரு பின்தொடர் செயற்திட்டத்தினை ஆரம்பித்ததோடு பல்துறை அரச நிறுவனங்களோடும் அரச முகவர்களோடும் தொடர்பு கொண்டு அவை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்து கொள்ளும்.

2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய தாபித்தலும், நிருவகித்தலும்,பணிகளை நிறைவேற்றுதலும் அலுவலக சட்டத்தின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிர்வாக உதவி, நலன்புரி சேவைகள் ஆகியவற்றைப் பெற்றுத் தரவும் வசதிகளேற்படுத்திக் கொடுக்கவும் OMP கடமைப்பட்டுள்ளது (பிரிவு 13 (1) (e)காணாமற்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார கஷ்டங்களை முன்னிட்டு அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதன் முக்கியத்துவத்தினையும் அவர்களில் மிக இடைப்பாட்டுடன் கூடிய குடும்பங்களுக்கு அவர்கள் தங்கள் சிக்கலான தேவைகளுக்கான இழிப்பிடு மற்றும் இதர வகைகளிலான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் வரையிலும் அவர்களுக்கேற்பட்ட பாதிப்புக்களை அங்கீகரிக்கும் வகையிலும் இது அவசியமானது என்பதை OMP அடையாளம் காண்கிறது. இடைக்கால நிவாரணங்களை ஏற்றுக்கொள்வதென்பது போதுமான, உடனடி, செயற்படும் பரிகாரங்கள், பொறுப்புக் கூறலுக்கான நீதித்துறை தீர்வு முதலான தமக்குரித்தான உரிமைகளை விட்டுக்கொடுத்தலாகாது என்பதை OMP அவதானிப்பதோடு தனது பணிப்பாணையை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.

Hot Topics

Related Articles