உலகம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் – எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.


இதன்பொழுது, பிராந்தியத்தின் அண்மைய பாதுகாப்பு விடயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவருக்கு உயர் ஸ்தானிகரால் விளக்கமளிக்கபட்டது.

மேலும் அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணல் மற்றும்; பிராந்தியத்தில் சமாதானம், ஸ்திரத்தன்மையுடன், அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதே பாகிஸ்தானின் விருப்பம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலையினை தணிக்க பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது எனவும் எந்தவிதமான வெளி ஆக்கிரமிப்பிலிருந்தும் தனது தேசத்தினை பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Hot Topics

Related Articles