இலங்கையில் புத்தாண்டை முன்கூட்டியே கொண்டாடும் Huawei

இலங்கையின் முதல்தர ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாகத் திகழும் Huawei இந்த புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்தவிலையில் சிறந்த ஸ்மார்ட்ஃபோனை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், சில ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை குறைத்துள்ளதாக Huawei அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் காணப்படும் எந்தவொரு Huawei விற்பனை நிலையத்துக்கும் விஜயம் செய்து, Huawei இன் புத்தாக்கமான ஸ்மார்ட்ஃபோன்கள் தொடர்பான அனுபவத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவற்றை கொள்வனவு செய்வது தொடர்பானதீர்மானத்தை மேற்கொள்ளுமாறும் Huawei அறிவித்துள்ளது.

இந்த பண்டிகைக்காலத்துக்காக விசேடமாக இந்த விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,வாடிக்கையாளர்கள் தற்போது nova3i ஸ்மார்ட்ஃபோனை 49,990 எனும் விசேட விலையில் கொள்வனவு செய்ய முடியும். மேலும், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தெரிவுகளான Y series 2019 விலைகளும் இந்த விசேட கொடுப்பனவுகளின் கீழ் குறைக்கப்பட்டுள்ளன. Y7 Pro 2019 ஐ தற்போது ரூ.40,999 எனும் விலையில் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், Y7 Pro 2019 ஐ 31,990 ரூபாய்க்கு வாங்கலாம். Y series தொலைபேசிகள் FullView display உடன் காணப்படுவதுடன், கவர்ச்சிகரமான முன்புற dewdrop தோற்றத்தையும் கொண்டுள்ளன. Y9 2019 தொலைபேசிகளில் பெரிய 6.5” full HD screen காணப்படுவதுடன், Y7 Pro 2019 இல் 6.29’ HD+ screen உள்ளது. மேலும், Y5 Prime 2018 இல் 5.45’ HD+ screen அடங்கியுள்ளது. மேலும், Y5 Prime 2018 ஐ ரூ. 18,990க்கு கொள்வனவு செய்ய முடியும். Y5 Lite 2018 இன் விலை ரூ. 16,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான தலைமை அதிகாரி பீற்றர் லியு கருத்துத் தெரிவிக்கையில்,

“வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குவது தொடர்பில் Huawei எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பண்டிகைக் காலப்பகுதியில், எமது ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்கப்படும் சலுகையினூடாக வாடிக்கையாளர்கள் பெருமளவு அனுகூலம் பெறக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்த விசேட சலுகைகளினூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், சிறந்த தரம், புத்தாக்கம் ஆகியவற்றுடன் விற்பனைக்கு பிந்திய உயர் சேவையை எதிர்பார்ப்போருக்கு சந்தையில் பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த கையடக்க தொலைபேசி தெரிவுகளாக இவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள ; HUAWEI ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தும் போது அனுபவிக்கக்கூடிய சிறப்புகளை இந்த பண்டிகைக் காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். விலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு HUAWEI ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை உரிமை கொள்வது, புத்தாக்கத்தை அனுபவிப்பது போன்றவற்றை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எமது தயாரிப்புகளிலிருந்து சிறந்த பயனை எமது வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வது என்பது எம்மைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் நாம் தொடர்ந்தும் செயலாற்றுவோம்.” என்றார்.

2800க்கும் அதிகமான அங்கீகாரம் பெற்ற விற்பனை தொடர்கள் மற்றும் 420 க்கும் அதிகமான சிங்கர் ஸ்ரீ லங்கா, சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் மற்றும் சிசில் வேர்ள்ட் காட்சியறைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட டயலொக் மற்றும் மொபிடெல் நிலையங்களுக்கு விஜயம் செய்து இந்த புத்தாண்டு விலைச் சலுகைகள் பற்றிய மேலதிக தகவல்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

IDC அண்மையில் வெளியிட்டிருந்த புள்ளி விவரங்களுக்கு அமைவாக உலகில், ஸ்மார்ட்போன் விற்பனையில் HUAWEI தனது போட்டியாளரை பின்தள்ளி இரண்டாவது ஸ்தானத்தை அண்மையில் தனதாக்கியுள்ளது. GfK அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் HUAWEI முதலாவது ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் BrandZ இன் முதல் 100 இடங்களில் திகழும் மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இந்த வர்த்தகநாமம் 48 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Forbes வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள ; பட்டியலில் 79 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது. Brand Finance வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த 500 வர்த்தகநாமங்களின் பட்டியலில் 12 ஆவது ஸ்தானத்தையும் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான Interbrand மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இது 68 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Fortune 500 தரப்படுத்தல் பட்டியலில் 72 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *