உலகம்

ரசிகையிடம் கன்னத்தில் அடிவாங்கிய நடிகர்

சாஹோ படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் நடிகர் பிரபாஸ் விமான நிலையத்தில் ஒரு ரசிகையிடம் கன்னத்தில் அடிவாங்கி இருக்கிறார்.


பாகுபலி படத்திற்குப் பிறகு பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் நடிகர் பிரபாஸ். தற்போது இவரது நடிப்பில் ‘சாஹோ’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சாஹோ பட வேலை தொடர்பாக பிரபாஸ் அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருக்கிறார். விமான நிலையித்தில் அவரை பார்த்த ரசிகை ஒருவர் ஓடி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் போட்டோ எடுத்த சந்தோஷத்தில் அவரை கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டு சென்றார்.

ரசிகை இப்படி ஆர்வக்கோளாறில் அறைவார் என்பதை பிரபாஸ் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கன்னத்தை தடவிவிட்டு சிரித்து சமாளித்தார் பிரபாஸ். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Hot Topics

Related Articles