உலகம்

சமூக வலைத்தளத்தில் வைரலான அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.

 

இந்த படத்தில், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


ஐதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கி வருகின்றனர்.

தலைப்பு வைக்காத இப்படத்திற்கு தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hot Topics

Related Articles