உலகம்

ஓவியா மீது மகளிர் அமைப்பு பொலிஸில் புகார்

90 எம்.எல் படத்தில் நடித்ததற்காக நடிகை ஓவியா கைதுசெய்ய வேண்டும் என்று சென்னை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஓவியா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘90 எம்.எல்’. அனிதா உதூப் இயக்கத்தில் வெளியான இப்படம் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்று வெளியானது.


இப்படம் ரசிகர்களிடையே விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில், தற்போது எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை பொலிஸ் நிலையத்தில், 90 எம்.எல் படத்தின் இயக்குனர் நடிகை ஓவியா, மற்றும் படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

‘பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், குழந்தைகளை சீரழிக்கும் வகையிலும் இப்படம் உருவாகியுள்ளது.


குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இருக்கிறது என்றும் புகார் கூறியுள்ளனர்.

Hot Topics

Related Articles