இலங்கை பாராளுமன்றில் 2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்ப்பணம்

இவ்­வ­ரு­டத்­துக்­கான வரவு செலவு திட்டம் இன்றையதினம் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.


கடந்த காலங்களில் நல்லாட்சி ஆட்சியின் போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத்திட்டத்தை போலல்லாது இது வெறுமனே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டம் என்பது விசேட அம்சமாகும்.

2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்­கீ­டாக 445000 கோடி ரூபா ஒதுக்­க­ப்பட்­டுள்­ள­துடன் இதில் 216000 கோடி ரூபாவை கட­னாக பெறவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்­டுக்­கான வரவு செலவு திட்­டத்தை கடந்த ஆண்டு சமர்ப்­பிக்க முடி­யாத நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்­கால வரவு செலவு திட்டம் ஒன்­றினை அர­சாங்கம் முன்­வைத்­தது.

இவ் இடைக்­கால கணக்­க­றிக்­கையில் இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்­க­ளுக்­காக 1765 பில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சேவை­க­ளுக்­காக 790 பில்­லியன் ரூபாவும், திரட்டு நிதி­யத்­துக்­காக 970 பில்­லியன் ரூபாவும், முற்­ப­ணங்­க­ளுக்­காக 5 பில்­லியன் ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இத­னைத்­தொ­டர்ந்து 2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்ட நிதி ஒதுக்­கீட்டு பிரே­ரணை கடந்த பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி சபை முதல்வர் லக்ஸ்மன் கிரி­யெல்­ல­வினால் முன்­வைக்­கப்­பட்­டது.

இப் பிரே­ர­ணையில் இம்­முறை வர­வு­செ­லவுத் திட்­டத்தில் 445000 கோடி ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் கடன் பெறக்­கூ­டிய தொகை 216000 கோடி ரூபா­வாகும். அத்­துடன் இக்­குறை நிரப்­பியில் ஜனா­தி­ப­திக்கு 1355 கோடியே 7180000 ரூபாவும், நிதி மற்றும் வெகு­சன ஊடக அமைச்­சுக்கு 18384 கோடியே 5358000 ரூபாவும், பாது­காப்பு அமைச்­சுக்கு 39306 கோடியே 9030000 ரூபாவும், பிர­த­மரின் அமைச்­சான தேசிய கொள்­கைகள்,பொரு­ளா­தார அலு­வல்கள் ,மீள் குடி­யேற்றம்,புனர்­வாழ்­வ­ளிப்பு,வட­மா­காண அபி­வி­ருத்தி,வாழ்க்கை தொழிற்­ப­யிற்சி,திறன் அபி­வி­ருத்தி,மற்றும் இளைஞர் அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 9830கோடியே 9652000ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தார அமைச்­சுக்கு 18748 கோடியே 2398000 ரூபாவும் வீட­மைப்பு ,நிர்­மா­ணத்­துறை,மற்றும் கலா­சார அமைச்­சுக்கு 1663 கோடியே 1300000 ரூபாவும் கல்வி அமைச்­சுக்கு 10500கோடி ரூபாவும் மலை நாட்டு புதிய கிரா­மங்கள்,உட்­கட்­ட­மைப்பு வச­திகள்,மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 388 கோடியே 3000000ரூபாவும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­சுக்கு 856 கோடியே 2000000ரூபாவும் கைத்­தொழில் வாணிப ,நீண்­ட­கால இடம்­பெ­யர்ந்தோர் மீள்­கு­டி­யேற்றம்,மற்றும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 289கோடியே 4900000ரூபாவும் உள்­ளக,உள்­நாட்டு அலு­வல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராச்சி அமைச்­சுக்கு 29239 கோடியே 6005000ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.மிகுதி ஏனைய அமைச்­சுக்­க­ளுக்கும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சலு­கைகள்

இம்­முறை வரவு செலவு திட்­டத்தில் அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­படும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சுய­தொழில், நிவா­ரண கடன்கள், சலு­கைகள் என இம்­முறை உள்­ள­டக்­கப்­ப­ட­வு­ள்ளமையும் குறிப்­பி­டத்­தக்­கது. அத்­துடன் வெளி­நாட்டு கொடுப்­ப­ன­வு­களை இலங்­கைக்குள் கொண்­டு­வரல், ஏற்­று­ம­திக்­கான தடை­களை நீக்­குதல் என்­ப­னவும் வாகன வரி­களில் மீள­மைக்­கப்­படும் எனவும், மது­பான வரிகள் அதி­க­ரிக்கும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் பெருந்­தோட்ட துறை­யி­ன­ருக்­கான நிவா­ர­ணங்கள், தேயிலை தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளொன்­றுக்கு 50 ரூபாய் கொடுப்­ப­னவு என்­ப­னவும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு

இன்றையதினம் பாரா­ளு­மன்­றத்தில் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் பலப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. குறிப்­பாக பாரா­ளு­மன்ற சபை ஆச­னங்­களை சபை அமர்­வு­க­ளுக்கு முன்னர் பரி­சோ­தனை செய்­யவும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அறை­களை பரி­சோ­தனை செய்­யவும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­துடன், பாரா­ளு­மன்ற கலரி இன்றையதினம் பொது­மக்கள் பாவ­னைக்கு அனு­ம­திக்­கப்­பட மாட்­டது.

சிறப்பு அதி­திகள் மாத்திரம் கலரியில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இன்றையதினம் செவ்வைக்கிழமை சபைக்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் நுகசெவன வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்படுவதுடன் சிறப்பு அதிதிகள் ஜயந்திபுர வாகன தரிப்பிடங்களில் அவர்களின் வாகனங்களை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்துக்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

 

மக்களை மேம்படுத்தும் வரவு-செலவுத்திட்டம்

வரவு-செலவுத்திட்ட யோசனைகள் அடங்கிய பிரேரணையை அமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.


இந்த வரவு செலவுத்திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவது தொடர்பான பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனது பணிக்கு உதவிய மனோ தித்தவெல்ல மற்றும் டெஸ்ஹால் டி மெல் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவுத்திட்டம் பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகும். அது எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறும்.
அதேவேளை, வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற குழுநிலை விவாதங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி வரை இடம்பெறும்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் மொத்த செலவினம் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபாவாகும்.

இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பான செலவின மதிப்பீட்டு பிரேரணை கடந்த மாதம் ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *