உலகம்

13 ஆண்டுகளுக்குப் பின் தனுஷுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

அசுரன் படத்தை அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக, 13 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகை இணைந்து நடிக்க இருக்கிறார்.


‘மாரி 2’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

கொடி படத்தில் தனுஷை இரண்டு வேடங்களில் நடித்த துரை செந்தில்குமார், அடுத்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க இருக்கிறார். இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருக்கிறார்.

இதற்குமுன் தனுஷ் – சினேகா இருவரும் ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தனுஷுடன் இணைய இருக்கிறார் சினேகா.

 

Hot Topics

Related Articles