உலகம்

புதிய சீருடையில் வலம்வரும் இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஸ்பொன்சர் நிறுவனமான நைக் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது.


இதன் அறிமுக நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, டோனி, ரஹானே, பிரித்வி ஷா மற்றும் இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் புதிய சீருடையுடன் போஸ் கொடுத்தனர்.
1983 மற்றும் 2011-ம் ஆண்டில் இந்திய அணி 50 ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. 2007 இல் 20 ஓவர் உலகக்கிண்ணத்தில் மகுடம் சூடியது.

இந்தியா வென்ற மூன்று உலகக்கிண்ணங்களின் திகதிகளும் புதிய சீருடையில் கொலரின் உள்பகுதியில் பொறிக்கப்பட்டு இருப்பது சிறப்பு அம்சமாகும்.


நேற்று தொடங்கிய அவுஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் இந்திய வீரர்கள் புதிய சீருடையுடன் வலம் வந்தனர். இங்கிலாந்தில் மே 30 ஆம் திகதி தொடங்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்திய வீரர்கள் இதே சீருடையைத் தான் அணிந்து விளையாட இருக்கிறார்கள்.

 

Hot Topics

Related Articles