உலகம்

‘கிரிவெசிபுர’ – இலங்கையின் இறுதி தமிழ் மன்னனின் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் திரைப்படம்

தமிழ்ப் பேசும் மன்னரான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் தான் இலங்கையின் இறுதி மன்னன் என்ற வரலாற்று உண்மையை முதல் முறையாக `கிரிவெசிபுர’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தெரியப்படுத்தப்படுகின்றது.


கண்டி இராசதானியை ஆட்சி செய்த ஸ்ரீவிக்ரம இராஜசிங்க மன்னனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ‘கிரிவெசிபுர’ என்ற பெயரில் மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முன்னோடி காட்சி அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.

வரலாற்று கதைக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், ஸ்ரீ விக்ரம இராஜசிங்கவின் உண்மையான குணாதிசயங்களை ஆராய்ச்சியின் மூலம் வெளிக்கொண்டுவரும் கதையாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

தமிழ், சிங்களம் ஆங்கிலம் என மும்மொழிகளும் படத்தில் கையாளப்பட்டுள்ளதோடு, பாடல்களும் இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன.


படத்தில் இரு மொழிகளையும், மும்மதங்களையும் சார்ந்தவர்கள் பணியாற்றியுள்ள நிலையில், இத்திரைப்படம் இலங்கையில் நல்லிணக்கத்திற்கு உந்துசக்தியாக அமையுமென படத்தின் இயக்குநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் இலங்கையின் பிரபல திரை நட்சத்திரங்களான புபுது சதுரங்க, நிரஞ்சனி சண்முகராஜா, எல்றோய் அமலதாஸ், ஜூலியானா ஜோன்பிலிப், நவயுகா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் பாடலொன்றுக்கான வரிகளை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். திரைப்படத்தை Best Life நிறுவனம் தயாரித்துள்ளது.


இலங்கையின் கடைசித் தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை இதுவரை இலங்கைத் திரையுலகம் கண்டிராத வகையில் பெரும் பொருட்செலவில் படக்குழுவினர் தயாரித்துள்ளனர்.

சிங்கள இயக்குநர் தேவிந்த கோங்கஹகே இப்படத்தில், சிங்கள – தமிழ்த் திரைக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். கண்டி மன்னன் தான் இலங்கையின் இறுதி சிங்கள மன்னன் என்று நிலவி வந்த கருத்தைப் பொய்யாக்கி, தமிழ் பேசும் மன்னரான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் தான் இறுதி மன்னன் என்ற வரலாற்று உண்மையை முதல் முறையாக `கிரிவெசிபுர’ என்ற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் மறைக்கப்பட்ட உண்மைகளை புடம்போட்டு வைக்கிறார்கள்.


கிரிவெசிபுர என்றால், மலையக மக்கள் வாழும் இடம் என்று அர்த்தம். இலங்கையில் ஒரு கோடி ரூபா செலவில் எடுக்கப்படுவதைத்தான் பெரிய பட்ஜெட் படம் என்று எண்ணுகின்றோம், ஆனால், `கிரிவெசிபுர’ 13 கோடி ரூபா செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரைப்பட தயாரிப்புக்களைப்போல`கிரிவெசிபுர’வை பிரமாண்டமான படம் என்று நாம் சொன்னால் மிகையாகது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.


இலங்கையை இறுதியாக ஆண்டது, தமிழ் மன்னன்தான் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்று வரலாற்று ரீதியாக நிறுவவுள்ள இப்படத்தை, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் இயக்கியுள்ளதால் இதற்கு பெரும் எதிரப்புகள் கிழம்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தில் மன்னர் காலத் தமிழில் பாடல் எழுதியுள்ளார் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இலங்கையின் பிரபல திரை நட்சத்திரங்களான புபுது சதுரங்க, நிரஞ்சனி ஷண்முகராஜா, எல்ரோய் அமலதாஸ், ஜூலியானா ஜோன்பிலிப், நவயுகா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வடக்கில் பிறந்து யுத்த சூழலில் வாழ்ந்து இப்படத்தின் பிரதான பாத்திரங்களில் ஒன்றாக பெரும்பான்மை கலைஞர்களுடன் மன்னன் கதாபாத்திரத்தில் நடித்த எல்ரோய் அமலதாஸிடம் இப்படத்தைப் பற்றி மேலோட்டமாக வினவியபோது,

நான் இந்த திரைப்படத்தில் ஶ்ரீ விக்ரம ராஜசிங்கனின் பெரியம்மா மற்றும் ராஜமாதாவான உபேந்திரம்மாவின் தம்பியான முத்துசாமி கதாபாத்திரத்தில் மன்னனாக நடித்திருக்கிறேன்.

இதேநேரத்தில் இந்த திரைப்படமென்பது வெறுமனே சிங்கள திரைப்படமென்ற வரையறைக்குள் பார்க்கப்படாது. ஒட்டுமொத்த இலங்கைக்குமேயான இலங்கையின் சினிமாவென்றே பார்க்கப்படவேண்டும். ஏனென்றால் மிகப் பிரம்மாண்டமாக பொருட்செலவில் பல கலைஞர்கள் நடித்துள்ள இத் திரைப்படத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என்று அனைத்து சமூகத்தினரும் இதில் தமது பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

மேலும் இந்திய சினிமாவைப் பெறுத்தவரையில் இத் திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை சினிமாவை எதிர்வருங்காலங்களில் வேறுகோணத்தில் நகர்த்துவதற்கு இந்த திரைப்படம் ஒரு முக்கிய காரணமாகத்திகழும் என்று நான் நம்புகின்றேன் என்றார்.

படத்தில் மூன்று மொழிகளையும், மும்மதங்களையும் சேர்ந்தவர்கள் பணியாற்றியுள்ளார்கள். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாடல்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், இத்திரைப்படம் இலங்கையில் சமூக நல்லிணக்கத்திற்கு உந்து சக்தியாக அமையும்.” என்று இயக்குநர் தேவிந்த கோங்கஹகே நம்பிக்கை தெரிவித்தார். இலங்கைத் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ‘கிரிவெசிபுர’ ஏற்படுத்தும் என்கின்றனர் திரைப்பட விமர்சகர்கள்.

“கிரிவெசிபுர” – முற்றிலும் வரலாற்று உண்மையுடனான நல்லிணக்கம்

Hot Topics

Related Articles