உலகம்

ஆர்யா – சாயிஷா திருமண ஏற்பாடுகள் தீவிரம்

ஆர்யா – சாயிஷா திருமணம் மார்ச்சில் நடைபெறவிருக்கும் நிலையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலுக்கு நடிகர் ஆர்யா நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.


நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச்சில் திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 10 ஆம் திகதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆர்யா – சாயிஷா திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் ஆர்யா தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலை நேரில் சென்று அழைத்திருக்கிறார். இதுகுறித்த தகவலை நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு நெருக்கமான புகைப்படமாக இது மாறிவிட்டது. என் நண்பன், அவனது திருமண அழைப்பிழை கொடுக்க வந்த இந்த தருணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்யா – சாயிஷா காதலோடு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Hot Topics

Related Articles