உலகம்

அறிமுகமானது 128 ஜி.பி. மெமரியுடனான பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன்

பிளாக்பெரி நிறுவனத்தின் கீ 2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


பிளாக்பெரி கீ 2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மெமரியை கொண்டுள்ளது. இத்துடன் புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் யூசர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டிருக்கிறது.

அதன்படி ரெட் எடிஷன் பிளாக்பெரி கீ 2 ஸ்மார்ட்போனின் செயலிகள் நவீன தோற்றம் பெற்றிருக்கின்றன.


புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகள் மற்றும் முன்புறம் சிவப்பு நிறம் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று கீ 2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஹப் பிளஸ் மென்பொருள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஹப் பிளஸ் செயலிகளின் கீழ் புதிதாக ஆக்‌ஷன் பார் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் பயனர்களுக்கு சர்ச், சார்ட் மற்றும் கம்போஸ் போன்ற அம்சங்களை இயக்க முடியும். இதேபோன்று பிளாக்பெரி ஹப் சேவையின் இன்டர்ஃபேசும் மாற்றப்பட்டுள்ளது.


பிளாக்பெரி கீ 2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

புதிய பிளாக்பெரி கீ 2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை 779 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக வட அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.


புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பிளாக்பெரி இயர்பட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய பிளாக்பெரி மொபைல் இணையத்தளத்தில் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

Hot Topics

Related Articles