உலகம்

மீண்டும் அணிக்கு திரும்புகிறீர்களா ? 360 டிகிரி யின் பதிலென்ன ?

உலகக் கிண்ணம் மட்டுமே என்னை ஒரு மனிதராகவும், கிரிக்கெட் வீரராகவும் வரையறுக்காது என்று ‘360 டிகிரி’ துடுப்பாட்ட வீரர் என அழைக்கப்படும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

டி வில்லியர்ஸ் இல்லாமல் தென்ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்றது.

இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவீர்களா? உலகக் கிண்ண போட்டி வரை விளையாடியிருக்கலாமே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி வில்லியர்ஸ் ‘‘உலகக் கிண்ண போட்டி மட்டுமே என்னை கிரிக்கெட்டராக வரையறுக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில்,

‘‘மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவீர்களா? என்பது பதில் அளிப்பதற்கான கடினமான கேள்வி. மீண்டும் அணிக்கு திரும்பினால், நண்பர்களுடன் இணைந்து உயர்ந்த லெவல் கிரிக்கெட்டை நாட்டிற்காக விளையாடலாம். இதை தவற விடுவது சற்று கடினமாக இருக்கிறது.

ஆனால், ஏராளமான விஷங்களை நான் மிஸ் செய்யவில்லை. 90 சதவிகிதமான விஷயங்களை நான் மிஸ் செய்யவில்லை. சர்வதேச போட்டியில் இருந்து நீண்ட தூரம் சென்று விட்டேன். உலகக் கிண்ணம் என்னை ஒரு கிரிக்கெட்டராகவும், மனிதராகவும் வரையறுக்க முடியாது’’ என்றார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். கடந்த ஆண்டு மே மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டி வரை விளையாடும்படி தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்ட போதிலும், அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இருபதுக்கு 20 லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதனால் பங்களாதேஷ் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதன்முறையாக விளையாடினார். ஐ.பி.எல். தொடர் முடிந்த உடன் இங்கிலாந்தில் நடைபெறும் டி-20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

Hot Topics

Related Articles