உலகம்

பெறுமதி வாய்ந்த வாய்ப்புகளை 5G உருவாக்கும் – Huawei இன் பிராந்திய தலைவர்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் 1.2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த வாய்ப்புகளை 5G உருவாக்கும் என Huawei இன் பிராந்திய தலைவர் MWC 2019 ஊடக நேர்காணலின் போது தெரிவித்தார்.


பார்சலோனாவில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றிள்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் வேகமான மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 5-6% ஆக காணப்படும். டிஜிட்டல் பொருளாதாரம் இதன் பின்புலத்தில் காணப்படும் பிரதான பங்களிப்பாக 20 சதவீதத்தை மேற்கொள்ளும்” என Huawei தெற்காசிய தலைவர் ஜேம்ஸ் வூ தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன் டிஜிட்டல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு பங்காளர்களுடன் கைகோர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

இந்தியா தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் 5G சேவையை வணிக ரீதியில் பாரியளவில் பயன்படுத்தக்கூடும் என வூ எதிர்வுகூறியதுடன் 2020 ஆம் ஆண்டளவிலிருந்து இந்த செயற்பாடுகள் ஆரம்பமாகலாம் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பிராந்தியத்தில் காணப்படும் 5G பாவனையாளர்களின் எண்ணிக்கை 80 மில்லியனாக பதிவாகும் என்றார். வயர்லெஸ்,டிஜிட்டல் மற்றும் இன்டெலிஜன்ட் சாதனங்கள் சமூக உற்பத்தித்திறனை சராசரியாக 4-8G இனால் அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

பிராந்திய தலைவரின் கருத்தின் பிரகாரம்,5G பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக தமது நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் கோரிக்கை கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

தாய்லாந்தில் 5G பரீட்சார்த்த செயற்பாடுகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்ட வூ பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்கு அவசியமான 5G சாதனங்கள் தாய்லாந்துக்கு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“தென்கிழக்காசியா என்பது வளர்ந்து வரும் சந்தை புத்தாக்கம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றை இணைக்கும் சிறந்த இஎன்ஜினாக அமைந்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு நாம் எமது முழு முயற்சியை மேற்கொள்வதுடன்,புத்தாக்கத்தினூடாக மதிநுட்பமான நோக்கையும் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

தாய்லாந்து போன்ற பிராந்தியத்தில் காணப்படும் சந்தை ICT அபிவிருத்தி சுட்டியில் (IDI) துரித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் ITU தரப்படுத்தலிலும் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

டிஜிட்டல் மயமாக்கத்தில் வளர்ந்து வரும் சந்தைகள் அதிகளவு வாய்ப்புகளை கொண்டுள்ளன என்பதை இவை உணர்த்துகின்றன. ICT உட்கட்டமைப்பு இதில் பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகங்களுமில்லை.

2018 இல் Huawei இனால் “Bangkok Platform” அன்டெனா தீர்வை நிறுவியிருந்தது. இது உயர் அடர்த்தி, உயர் வேகம் மற்றும் துரித வளர்ச்சி LTE சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Huawei இனால் 5G microwave அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக வயர்லஸ் சமிக்ஞைகளின் ஸ்பெக்ட்ரம்களின் வினைத்திறன் இருமடங்காக்கப்பட்டிருந்தது.

“தென்கிழக்காசியாவை பொறுத்தமட்டில் 5G க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2019 அமைந்திருக்கும் என நான் நம்புகிறேன். 5G க்கான உலகின் பிரதான வழங்குநராக Huawei திகழ்வதனூடாக சேவை வழங்குநர்களுக்கு தமது 5G கனவுகளை நனவாக்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நாம் தொடர்ந்தும் 5G, broadband, cloud, artificial intelligence மற்றும் smart devices களில் முதலீடுகளை மேற்கொண்டு எமது வாடிக்கையாளர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அனுகூலங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு பங்களிப்பு வழங்குவோம்.” என்றார்.

1987 ஆம் ஆண்டு சீனாவில் Huawei நிறுவப்பட்டது. தற்போது உலகின் மாபெரும் தொலைத்தொடர்பாடல் சாதனங்கள் வழங்குநாக திகழ்வதுடன் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான இரண்டாவது மாபெரும் உற்பத்தியாளராகவும் அமைந்துள்ளது. 2018 இல் நிறுவனத்தின் வருமானம் 108.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்ததுடன் முன்னயை ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

தென்கிழக்காசியாவில் நிறுவனம் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 2018 இல் அதன் நுகர்வோர் வியாபாரம் 42% ஆல் பிராந்தியத்தில் அதிகரித்திருந்தது. மேலதிக தகவல்களுக்கு Huawei ஒன்லைன் தளமான www.huawei.com பார்க்கவும்.

Hot Topics

Related Articles