உலகம்

Autogroup International இன் புதிய முகாமைத்துவ பணிப்பாளராக சமத் தென்னகோன் நியமனம்

உயர் பெறுமதி வாய்ந்த வாகனங்களை இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு செலுத்தும் வகையில் மாற்றியமைப்பது மற்றும் மீள உற்பத்தி செய்வது போன்ற செயற்பாடுகளில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழும் Autogroup International நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பிற்றர் ஹில், தமது சர்வதேச மூலோபாய மற்றும் விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய முகாமைத்துவ பணிப்பாளராக சமத் தென்னகோன் அவர்களை நியமித்துள்ளார்.

Chairman, Peter Hill welcoming new MD, Chamath Tennekoon

வாகனங்கள் துறையில் சமத் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், முன்னர் Ford ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார்.

இவரின் வழிகாட்டலில் Autogroup தனது உற்பத்தி மற்றும் மீள்-பொறியியல் செயற்பாடுகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேலும் விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளது.

Autogroup International பிரைவட் லிமிடெட் என்பது முழுமையாக அவுஸ்திரேலிய உரிமையாண்மையின் கீழ் இயங்கும் இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியை பெற்ற நிறுவனமாகும். வாகனங்கள் மீள்-பொறியியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் ஐக்கிய அமெரிக்காவின் – டல்லஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

1994 ஆம் ஆண்டு முதல், Autogroup அமெரிக்காவின் சகல வர்த்தக நாமங்களையும் சேர்ந்த கார்கள் ட்ரக் வகைகள் மற்றும் SUV வகைகள் போன்றவற்றை இடது கை செலுத்துகையிலிருந்து வலது கை செலுத்துகைக்கு மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னோடியாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல் முதல் அவற்றை கப்பலேற்றல், காப்புறுதி ஏற்பாடுகள் போன்ற பல்வேறு வகையான நடவடிக்கைகளை நிறுவனம் முன்னெடுக்கிறது.Chevrolet – Camaro & Silverado, Cadillac – Escalade, Ford – F150, F250 & Shelby Mustang, Dodge – RAM, Challenger, Charger, GMC – Yukon, Denali & Sierra, Hummer – H2, & H3 மற்றும் ஜப்பானிய வட அமெரிக்க மாதிரிகளான Nissan Titan மற்றும் Toyota Tundra ஆகிய வாகனங்களை இலங்கையில் செலுத்தப்படும் வலது கை செலுத்துகைக்கு மாற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

மீள்-பொறியியல் நடவடிக்கையில் 25 வருடங்களுக்கு அதிகமான கால அனுபவத்தைக் கொண்டுள்ள Autogroup, இலங்கையில் 18 வருடங்களுக்கு மேலாக வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.

கடுவளையில் அமைந்துள்ள நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலை ISO 9001 மற்றும் Australian Design Rules (ADR) சான்றுகளை பெற்றுள்ளது. welding, pattern making, fiberglass & plastics, upholstery, sheet metal, auto electrical, motor mechanics போன்ற பிரிவுகளில் உயர் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்களை இந்த நிலையம் கொண்டுள்ளதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பொறியியல் மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி அணியினரும் அடங்கியுள்ளனர்.

சமத் தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில், “பொறியியலாளர் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர் எனும் வகையில், Autogroup ஐ முன்நோக்கி கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையர் எனும் வகையில், வியாபாரத்துக்கு நாம் வழங்கும் பெறுமதி சேர்ப்பை எண்ணி பெருமை கொள்கிறேன்.” என்றார்.

“அடுத்த 12 மாத காலப்பகுதியில், நவீன சாதனங்கள் மற்றும் உற்பத்தி செயன்முறைகளில் நாம் பெருமளவு முதலீடுகளை மேற்கொள்வோம். ஊழியர்களுக்கு பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பது மாத்திரமன்றிரூபவ் புதிய தொழில்நுட்பங்களை நாட்டுக்குள் கொண்டுவருவதிலும் ரூடவ்டுபடுவோம்.” என மேலும் குறிப்பிட்டார்.

புதிய நடவடிக்கைகளுக்கு எமது செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் நாம் எண்ணியுள்ளோம். இதில் அமெரிக்காவின் பாரம்பரிய கார்களை மாற்றியமைப்பதும் அடங்கியுள்ளது.

Hot Topics

Related Articles