உலகம்

வரலாற்று சாதனையை பதிவு செய்த இலங்கை ஆசியாவின் கிரிக்கெட் சிங்கங்கள் என நிரூபித்தது

தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடர் வென்ற முதல் ஆசிய அணியாக வரலாற்று சாதனையைப் பதிவுசெய்த இலங்கை அணி தாமே ஆசியாவின் கிரிக்கெட் சிங்கங்கள் என்பதை நிரூபித்துள்ளது.


தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ் தொடரை வென்ற மூன்றாவது அணியாக இலங்கை அணி பதிவாகியுள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து அணியும் 2 ஆவது இடத்தில் அவுஸ்திரேலிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில் இலங்கை அணி 3 ஆவது டெஸ்ட் அந்தஸ்துள்ள அணியாக தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்றுவந்தது.

இதில் முதலாவது போட்டியில் இலங்கை அணி ஒரு விககெட்டால் அதிரடி வெற்றி பெற்றது.


இந்நிலையில் தென்னாபிரிக்காவின் டேர்பனில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் தென்னாபிரிக்க வீரர்களை குறைந்த ஓட்டங்களுக்குள் சுருட்ட, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட இலகுவான வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனையைப் பதிவுசெய்த்தது.

வெற்றி பெறுவதற்கு 197 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி குசல்மென்டிஸ் மற்றும் புதிய இளம் வீரர் ஒசாத பெர்னாண்டோவின் அபாரமான துடுப்பாட்டம் காரணமாக இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து தனது இலக்கை அடைந்தது.

குசல்மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றார் அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய ஒசாட பெர்ணான்டோ தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்காவில்டெஸ்ட் தொடரை வென்ற ஒரெயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Hot Topics

Related Articles