மெக்சிகோவில் மதுபான விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.


மெக்சிகோவின் குவிண்டானா ரூ மாகாணத்தில் கரீபியன் கடலையொட்டி உள்ள கான்கன் நகர் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இங்கு சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

அவர்கள் மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் திடீரென அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

எனினும் இந்த கோர சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here