உலகம்

ரோபோ கால்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி..!

பனிச்சறுக்கில் சிக்கியவர்களை தேடுவதற்கும், பனிப்பாறைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும், ரோபோ கால்களுக்கு ‘ஸ்கேட்டிங்’ பயிற்சி அளிக்கப்படுகிறது.


சுவிற்சர்லாந்த் நாட்டில் உள்ள ஈடிஎச் ஜூரிச்சின் ரோபோட்டிக் ஆய்வகத்தில் பல்வேறு வகையான ரோபோக்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது, பனிச்சறுக்கில் சிக்கியவர்களை தேடுவதற்கும், பனிப்பாறைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கும் ரோபோக்கள் உருவாக்கப்படுகிறது. இதன் முதல்கட்டமாக, ரோபோக்களின் கால்கள் மட்டும் உருவாக்கப்பட்டு, அவைகளுக்கு ‘ஸ்கேட்டிங்’ பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, இந்த ரோபோவை உருவாக்கிய ஈடிஎச் ஜூரிச்சின் ரோபோட்டிக் ஆய்வக பேராசிரியர் ஸ்டெலியன் கோரோஸ் கூறியதாவது:
“பனிச்சறுக்கின்போது பாறைகளில் சிக்கிக் கொள்பவர்களை தேடிக் கண்டுபிடிக்கவும், பனிப்பாறைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கும் ரோபோக்களை உருவாக்க விரும்பினோம். அதன் முதல் கட்டமாக, பனிச்சறுக்கில் ரோபோ எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள ரோபோவின் கால் பகுதி மட்டும் உருவாக்கப்பட்டு, அதற்கு ’ஸ்கேட்டிங்’ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் உள்ள பிளேடு போன்ற அமைப்பு, மனிதர்களைப்போல எந்த திசையிலும் மாற்றி மாற்றி ‘ஸ்கேட்டிங்’ செய்ய உதவும்.

இதையடுத்து, பாகங்கள் முழுவதும் 3டி தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு தானாகவே இயங்கும் விதமாக ரோபோ உருவாக்கப்படும். இந்த ரோபோக்களுக்கு 4 கால்கள் பொருத்தப்படுவதால், எவ்வளவு உயரமான பனிப்பாறைகளிலும் ஏறி இறங்கிச் செல்லும்.

இவ்வகை ரோபோக்கள் பனிப்பாறைகளில் சிக்கியவர்களை தேடுவதற்கும், மீட்புப் பணிகளுக்கும், பனிச்சறுக்கில் ஈடுபடும் மக்களுக்கு உதவி செய்யவும் பயன்படும்” என்றார்.

Hot Topics

Related Articles