உலகம்

“உப்பில்லா பண்டம் குப்பையிலே அக்கால பழமொழி : அளவான உப்பே ஆரோக்கியம் இக்கால பழமொழி”

தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்களில் பலரும் தங்களின் உணவுடன் உப்பை சேர்த்து உட்கொள்வதன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.


உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் படி நாளாந்தம் 5 மில்லிகிராம் உப்பை உணவுடன் சேர்த்துக் கொண்டால் போதும்.

ஆனால் மக்கள் நாளாந்தம் தங்களுடைய உணவின் வழியாக 11 மில்லிகிராம் வரையில் உப்பை சாப்பிடுகிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உப்பை அதிகமாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயம் தொடர்பான பாதிப்புகளும் அதிகரிக்கும். சிறுநீரகங்களின் செயல்பாட்டிலும் பாதிப்பு உருவாக்கும்.

அத்துடன் இரத்த நாளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உப்பின் அளவு அதிகமாகும் போது, இரத்த நாளங்களில் பயணிக்கும் ஒக்சிஜனிலும் சமச்சீரின்மை உண்டாகும்.

இதனால் தோல்களுக்கும், உடலுக்கும் கிடைக்க வேண்டிய போதிய ஒக்ஸிஜன் கிடைக்காமல் போகக்கூடும். அத்துடன் இதன் பின்விளைவாக தோலில் சுருக்கங்கள் உருவாகும். இதனால் தோற்றத்தில் பாரிய மாற்றம் ஏற்படும்.

அதனால் உப்பு அதிகமாக உள்ள பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் பொருள்களை வாங்குவதை தவிர்க்கவேண்டும். நாளொன்றுக்கு 5 மில்லிகிராம் உப்பு போதுமானது.

கருவாடு, உப்பு கருவாடு, ஊறுகாய் போன்றவற்றை முற்றாக தவிர்க்கலாம் உப்பு குறைவாக சேர்க்கப்பட்ட பொருள்களை பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது அந்த கால பழமொழி. அளவான உப்பே ஆரோக்கியம் என்பது இக்கால பழமொழி.

Hot Topics

Related Articles