இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககரா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்ககரா அளித்த பேட்டியில் கூறியதாவது,
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி நம்ப முடியாத வகையில் ஓட்டங்களை குவிக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலகட்டத்துக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருக்கிறார்.
விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக துப்பாட்டம் செய்து வருகிறார். அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 64 சதம் அடித்துள்ளார்.
டெண்டுல்காரின் 100 சதம் சாதனையை அவர் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சங்ககரா 63 செஞ்சூரி விளாசியுள்ளார்.