உலகம்

எல்.கே. ஜி. வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

முன்னணி கொமடி நடிகரான ஆர் ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் எல். கே. ஜி.படம் இம்மாதம் 22 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கொமடி நடிகராக உயர்ந்தவர் ஆர் ஜே பாலாஜி. அதனைத் தொடர்ந்து அவர் கதையின் நாயகனாக ‘ எல் .கே. ஜி. ’ என்ற படத்தில் ஒப்பந்தமானார்.

இந்த படம் வெளியாகும் வரை எந்த படங்களிலும் நடிக்க போவதில்லை என்றும் சொன்னார். அத்துடன் அந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதினார் பாலாஜி. பிரபு என்பவர் இயக்கியிருக்கும் அந்த படத்தில் சமகால அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்து தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர் வரை அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தியே அமைக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் டொக்டா ஐசரி கே கணேஷ் தயாரித்திருக்கிறார். இதில் ஆர் ஜே பாலாஜியுடன் பிரியா ஆனந்த் மொட்டை ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரரும், பந்துவீச்சாளருமான கபில்தேவ் வாழ்த்து செய்தி அனுப்பியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் இம்மாதம் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

.

Hot Topics

Related Articles