உலகம்

STIHL Germany உடனான பங்குடமை தொடர்பில் DIMO அறிவிப்பு

உலகப்புகழ் பெற்ற ஜேர்மனிய வலு உபகரண வர்த்தகநாமமான STIHL உடனான பங்குடமை தொடர்பில் Diesel & Motor Engineering PLC (DIMO)அண்மையில் அறிவிப்பை விடுத்துள்ளது.
DIMO நிறுவனம் இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த வர்த்தகநாமங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி ஸ்தானத்தை வெளிப்படுத்தும் வகையில் அது நாடளாவியரீதியில் STIHL உற்பத்திகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
1926 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட STIHL குழுமமானது தொழில்சார் காடு வளர்ப்பு,விவசாயம்,தோட்டம்,நிலப் பராமரிப்பு, கட்டுமானத் துறை மற்றும் கோருகின்ற தனியார் பாவனையாளர்களுக்கான வலு (Outdoor Power Equipments)உற்பத்தி செய்து வருகின்றது.
இலங்கையிலுள்ள தனது முகவர்கள் மத்தியில் புத்தாக்கமான STIHL உற்பத்தி வரிசையை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வானது அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் நிகழ்வு மையத்தில் இடம்பெற்றதுடன் DIMO மற்றும் STIHL  நிறுவனங்களின் முகாமைத்துவ அதிகாரிகள் இதில் கலந்து சிறப்பித்துள்ளனர். நாட்டின் பல பாகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 50 இற்கும் மேற்பட்ட முகவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். STIHL உற்பத்தி வரிசை மற்றும் அதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பில் முகவர்களுக்கு அறிவூட்டப்பட்டது. உற்பத்திகளை நேரடியாக கண்டும் இயக்கியும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் இந்நிகழ்வின் மூலமாகப் பெற்றுக்கொண்டனர்.
DIMO  நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் சமீபத்தைய இந்த பங்குடமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில்எமது தலைசிறந்த விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு சேவையுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்கும் முகமாக DIMO நிறுவனம் எப்போதும் உலகின் மிகச் சிறந்த வர்த்தகநாமங்களுடன் பங்காளராக இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. மிகச்சிறந்த பொறியமைப்பு வர்த்தகநாமங்களை இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் DIMO  நிறுவனம் பெயர்பெற்று விளங்குவதுடன் கடந்த காலங்களில் எமது பங்காளர்களின் நம்பிக்கையையும் வென்றெடுத்துள்ளது.
ஜேர்மனியின் STIHL உடனான எமது இப்பங்குடமை தொடர்பில் அறிவிப்பதையிட்டு நாம் மிகுந்த பெருமையும்,கௌரவமும் அடைவதுடன் இந்த கூட்டிணைப்பானது எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்கி அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதற்கு நன்மையளிக்கும் என நாம் திடமாக நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
STIHL ஆனது 1971 ஆம் ஆண்டு முதல் உலகில் உச்சத்தில் திகழும் பொறிமுறை வெட்டுச் சாதனங்கள் வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்றது. 37 விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணை நிறுவனங்கள் உட்பட  உலகளாவில் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளில்  அண்ணளவாக 120 இறக்குமதியாளர்கள் மற்றும் 45,000 இற்கும் மேற்பட்ட சேவை முகவர்கள் மூலமாக STIHL  உற்பத்திகள் பிரத்தியேகமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜேர்மனி, அமெரிக்கா, பிரேசில்,சுட்சலாந்து,சீனா,அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஏழு நாடுகளில் உற்பத்தி ஆலைகளையும் STIHL கொண்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் 14,920 ஊழியர்களைக் கொண்ட தொழிற்படையுடன் 3.46 பில்லியன் யூரோ தொகை என்ற உலகளாவிய மொத்த விற்பனையையும் அது அடையப்பெற்றுள்ளது.
இப்பங்குடமையின் மூலமாக STIHL  இன் உற்பத்தி வரிசையின் கீழ் வலு உபகரண உற்பத்திகளை இலங்கை எங்கிலும் DIMO விநியோகிக்கவுள்ளதுடன் நவீன வர்த்தகம் மற்றும் ஏனைய விநியோக வழிமுறைகளில் தனது முகவர் வலையமைப்பு மற்றும் நிபுணத்துவத்தை அது உபயோகிக்கும். மரம் வெட்டும் கருவிகள் (chainsaw) மற்றும் சங்கிலி வழிகாட்டுகோல்  (Brush Cutters), புல் வெட்டும் கருவிகள் (Brush Cutters),களையெடுக்கும் கருவிகள் (Weeders) ,உயர் அழுத்த சுத்தமாக்கிகள் (High Pressure Washers), தூசி உறிஞ்சும் கருவிகள் (Vacuum Cleaners), பூமி துளைக்கும் இயந்திரம் (Earth Augers) மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான ஏனைய பல உற்பத்திகளும் வழங்கப்படுவதை இந்த பங்குடமை உறுதி செய்யும். DIMO நிறுவனம் விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு சேவை மற்றும் வலு உபகரணங்களை சந்தைப்படுத்துவதில் கொண்டுள்ள தேர்ச்சி ஆகியவற்றிற்கு விசேட இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. நாட்டில் STIHL  உற்பத்திகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தராக DIMO தெரிவு செய்யப்பட்டமைக்கு அவையே முக்கியமான காரணிகளாக அமைந்துள்ளன.
STIHL  நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. பாரிந் பிரபுதேசாய் அவர்கள் கருத்து வெளியிடுகையில் “இலங்கையில் எமது உற்பத்திகளுக்கான தலைசிறந்த விநியோகத்தராக DIMO  செயற்படும் என்ற உத்தரவாதத்தையும் நம்பிக்கையையும் நாம் கொண்டுள்ளோம். மோட்டார் வாகனத் தொழிற்துறையில் இந்த நிறுவனம் எப்போதும் முன்னிலை வகித்து வந்துள்ளதுடன் அதன் பொறுப்புணர்வு மிக்க மற்றும் தொழில் தர்ம வியாபார மூலோபாயங்கள் மீது காண்பிக்கும் அர்ப்பணிப்புடனான ஈடுபாடானது இப்பங்குடமைக்கு மிகவும் நன்மையளிக்கும்” என்று குறிப்பிட்டார்.
மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் வாகன தீர்வுகளை வழங்குவதில் தேசத்தின் முன்னணி வழங்குனர் என்ற வகையில் சமூகத்தின் தேவைகளை இனங்காண்பதில் DIMO நிறுவனம் எப்போதுமே ஏனைய நிறுவனங்களை விடவும் முன்னின்று செயற்பட்டு வந்துள்ளது.
அதன் விளைவாக DIMO நிறுவனம் உள்நாட்டில் கொண்டுள்ள தனது பலங்கள் மற்றும் ஆற்றல்களினூடாகரூபவ் உலகில் மிகச் சிறந்த பொறியமைப்பு வர்த்தகநாமங்களுக்கு பயனை சேர்ப்பிக்கின்றது.

Hot Topics

Related Articles