அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானமொன்று வீட்டின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆரஞ்சு கவுண்டியில் இருக்கும் புல்லர்டென் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார்.

யோப்ர லிண்டா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.


இந்த கோர விபத்தில் விமானி மற்றும் வீட்டில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here