உலகம்

சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தில் சுதந்திர தினம் !

சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தில் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.


இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தில் இன்று காலை 9 30 மணியளவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தேசியகொடியை இந்தியாவிற்கான இலங்கை துணை உயர் ஸ்தானீகர் திரு வடிவேல் கிருஷ்ணமூர்த்தி ஏற்றினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசத்திற்காக உயிர்நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


பின்னர் சுதந்திர தினவிழாவிற்கான பாரம்பரிய தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. அதன்பிறகு புத்த மதம், இந்து, கிறித்துவம், இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த சண்முகம் சிவாச்சாரியர், போதி சங்கத்தைச் சேர்ந்த புத்தபிக்கு கலாகேம, பாதிரியர் சுரேஷ், இமாம் சலாலுதீன் அஹமத் அயூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


இதைத்தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் சுதந்திர தின உரை சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாகாண அமைச்சர்கள் மற்றும் உயர் ஸ்தானீக்ர் ஆகியோர் வாசித்தனர். இதைத் தொடர்ந்து சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளைப் பற்றிய விடயங்களை உயர் ஸ்தானிகர் திரு டிவவேல் கிருஷ்ணமூர்த்தி விரிவாக பட்டியலிட்டு உரையாற்றினார். விழா நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

முன்னதாக சென்னையிலுள்ள போதி சங்கத்தில் பதினான்கு புத்தபிக்குகள் பங்குபற்றிய ‘ஹீல் தனயா ’ என்ற நிகழ்வும் நடைபெற்றது.
இலங்கை துணை தூதரகத்திற்கு வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான இலங்கையர்களுக்கு உயர் ஸ்தானிகர் திரு வடிவேல் கிருஷ்ணமூர்த்தி சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

Hot Topics

Related Articles