உலகம்

இந்தியா – உத்தரபிரதேசத்தில் மனைவி, 3 பிள்ளைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குப்தா. வியாபாரியான இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர், நேற்று தனது மனைவிக்கும், மகன் மற்றும் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்தார். இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், தந்தையான ரமேஷ் குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இவ்வாறு தற்கொலைசெய்து உயிரை மாய்த்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Hot Topics

Related Articles