உலகம்

தாய் இறந்த செய்திகேட்டும் தாய் நாட்டுக்காக விளையாடிய வீரர்

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசப், தனது தாய் இறந்த சோகத்துக்கிடையிலும் அணிக்காக துடுப்பெடுத்தாடியதோடு பந்து வீச்சிலும் அசத்தியுள்ளார்.


மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் மேற்கிந்தியத் தீவுகளின் ஆண்டிகுவாவில் நடைபெற்றது.
கடந்த மாதம் 31 ஆம் -திகதி ஆரம்பமாகிய இரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்றுடன் முடிவடைந்தது.

2 ஆவது நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்களை எடுத்திருந்தது. பிராவோ 33 ஓட்டங்களுடனும் ஹோல்டர் 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3 ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோசப்பின் தாயார் மரணம் அடைந்தார். இதனால் ஜோசப் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.


ஆனால் ஹோல்டர், ரோச் ஆட்டமிழந்த பின்னர், 9 ஆவது விக்கெட்டுக்காக துடுப்பெடுத்தாட அவர் களம் இறங்கினார். 7 ஓட்டங்கள் எடுத்தபோது பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 132 ஓட்டங்களில் சுருண்டது. ஜோசப் இங்கிலாந்து அணியின் டென்லி (17), ஜோ ரூட் (7) ஆகியோரை வெளியேற்றினார்.

தாயார் இறந்த சோகத்துக்கிடையிலும் அணிக்காக விளையாடி அனைத்து ரசிகர்களின் மனதையும் ஈர்த்தார் ஜோசப். ஜோசப்பின் தயாராக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கையில் கருப்புப்பட்டி அணிந்து விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles