உலகம்

தளபதி விஜயின் மகளுக்கு இப்படியொரு திறமையா ?

விஜய்யின் மகளான சாஷா பேட்மிண்டன் விளையாட்டில் வெற்றி பெற்றதாக பாடசாலை வெளியிட்ட தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.


நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யோடு ஒரு பாடலில் நடனமாடி திரையுலகில் அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பாக ‘ஜங்‌ஷன்’ என்ற குறும்படத்தில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன்பிறகு வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் சஞ்சய். தனது முதல் பேட்டியாக ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ மற்றும் ‘நோட்டா’ படங்களின் இயக்குனர் ஆனந்த் ‌ஷங்கரை பேட்டி எடுத்தார்.


இப்படி அண்ணன் மீடியாவில் அசத்திக் கொண்டிருக்க, தங்கை திவ்யா சாஷாவோ விளையாட்டில் கலக்குகிறார். தற்போது சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நே‌ஷனல் பாடசாலையில் படித்து வருகிறார் சாஷா.

இந்தப் பாடசாலையில் பள்ளி பேட்மிண்டன் குழுவினரின் புகைப்படங்கள் அதிகாரபூர்வ முகநூல் வெளியிடப்பட்டுள்ளது.


அந்தக் குழுவில் திவ்யா சாஷா விஜய்யும் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் சமீபத்தில் கலந்துகொண்ட 3 போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

 

Hot Topics

Related Articles