உலகம்

கிரிக்கெட் பந்து தாக்கியதில் இலங்கை அணி வீரர் மைதானத்தில் சுருண்டு வீழ்ந்தார்

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் வீசிய பந்து இலங்கை அணி வீரரைத் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே நிலைகுலைந்து வீழந்துள்ளார்.


இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்னவே பவுன்சர் பந்தினால் தாக்கப்பட்டநிலையில் மைதானத்திலிருந்து ஸ்டிரெச்சர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சிறப்பான விதத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த திமுத் கருணாரட்னவை பட்கமின்ஸின் பவுன்சர் பந்து தாக்கியுள்ளது.

திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை பட்கமின்ஸின் பவுன்சர் பந்து ஹெல்மெட்டின் பின்புறத்தில் கழுத்திற்கு அருகில் தாக்கியது.

உடனடியாக நிலத்தில் விழுந்து வலியால் துடித்த திமுத் கருணாரட்னவிற்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் ஸ்டிரெச்சர் மூலம் மைதானத்திலிருந்து அவர் வைத்தியசாலைக்கு அவசரமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

 

Hot Topics

Related Articles