ஆப்பிள் நிறுவன சாதனங்களை உலகம் முழுக்க சுமார் 140 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளில் ஒன்றை அதிகரித்திருக்கிறது.
ஹூஸ்டனை சேர்ந்தவர் ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பிழையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் பிரிவு அபார வளர்ச்சி பெற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆப்பிள் நியூஸ் சேவையை மாதம் சுமார் 8.5 கோடி பேரும் ஆப்பிள் மியூசிக் சேவையை சுமார் ஐந்து கோடி பேர் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாய் விடுமுறை காலத்தில் 15 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. ஆப்பிள் நிறுவன மூத்த நிதி அலுவலர் லுசா மேஸ்ட்ரி வெளியிட்டிருக்கும் தகவல்களில் உலகம் முழுக்க சுமார் 140 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

இவற்றில் 90 கோடி ஐபோன்கள் பயன்பாட்டில் இருக்கிறது என தெரிவித்தார். ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான டிம் குக் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் இதுவரை இல்லாத அளவு புதிய மைல்கல் கடந்துள்ளது. அந்த வகையில் உலகம் முழுக்க சுமார் 140 கோடி பேர் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

முன்தாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் உலகில் சுமார் 130 கோடி பேர் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தி வருவதாக அறிவித்தது. அந்த வகையில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவன சாதனங்கள் 10 கோடி என அதிகரித்திருக்கிறது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் சேவைகள் 19.1 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் இதர உபகரணங்கள் 33 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. எனினும் மேக் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் முறையே 9 மற்றும் 17 சதவிகிதம் சரிந்திருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here