உலகம்

இலங்கையின் 2018 ஆம் ஆண்டில் பிரபல்யம் பெற்ற திறன்பேசியாக OPPO தெரிவு

கைபேசிகள் துறையிலுள்ள அனைத்து வர்த்தக நாமங்களுக்கும் கடந்த வருடம் என்பது மிகவும் சிறப்பானதொரு ஆண்டாக அமைந்தது.
பெரும்பாலான வாடிக்கையாளர் எதிர்பார்த்திராத பலதரப்பட்ட அம்சங்களை பல்வேறு முன்னணி சாதனங்கள் கொண்டிருந்தன. இலங்கையைப் பொறுத்த வரை, பல்வேறு புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிடமிருந்து பல சாதனங்கள் வெளியீடு செய்யப்பட்டன.
இருந்தபோதிலும் இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற திறன்பேசி நாமம் தொடர்பில் எந்தவொரு முறையான போட்டியும் முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கையின் தொழில்நுட்ப கைபேசி வலைத்தளமான அன்ட்ரொயிட் வெடகாரயோ (அன்ட்ரொயிட் கில்லாடிகள்) ஆனது, தங்களது உத்தியோகபூர்வ வலைத்தளமான www.androidwedakarayo.com ஊடாக புதிய கருத்து கணிப்பு ஒன்றினை முன்னெடுத்ததுடன் OPPO  ஆனது 2018 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகவும் பிரபல்யம் பெற்ற வர்த்தக நாமம்’ எனும் விருதை வென்றது.
இதன்போது இலங்கையிலுள்ள அனைத்து திறன்பேசி வர்த்தகநாமங்களின் பெயர்களும் இடம்பெற்ற பட்டியலில் பொதுமக்கள் தமக்கு பிடித்த வர்த்தகநாமத்திற்கு வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் Pinpoll  இன் கருத்துக் கணிப்பு முறைமையுடன் வலைத்தளத்தில் இடம்பெற்றது.
குறித்த கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வழங்கப்பட்டு வந்ததுடன் இதன் விளைவாக பல்வேறு இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் தங்களுக்கு பிடித்த வர்த்தநாமத்திற்கு ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஒரே நபர் பலமுறை வாக்களிப்பதை தடுக்கும் வகையில் வாக்காளர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் உருவப்பட சான்றளிப்பு கேட்கப்பட்டிருந்தது.
இந்த கருத்துக்கணிப்பு ஒரு வாரத்திற்கு நடைபெற்று 2018 டிசம்பர் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததுடன் கருத்துக் கணிப்பு தொடர்பான முடிவுகள் தொடர்ச்சியாக பொதுமக்களுடன் பகிரப்பட்டன.
“OPPO ஆனது சந்தேகத்துக்கிடமின்றி இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமான வர்த்தக நாமமாக திகழ்கிறது. 2018 ஆம் ஆண்டின் மிகவும் பிரபல்யம் பெற்ற வர்த்தக நாமத்திற்கான கருத்துக்கணிப்பில் குறித்த வர்த்தக நாமம் முதலிடத்தை பெற்றது. இலங்கையின் இளைஞர்களுடன் உணர்வுபூர்வமான பிணைப்பினை இவ் வர்த்தக நாமம் உருவாக்கிக் கொண்டுள்ளதாக நாம் நம்புகிறோம்” என அன்ட்ரொயிட் வெடகாரயோ குழுவைச் சேர்ந்த கெவிந்து ஆலோக தெரிவித்தார்.
அன்ட்ரொயிட் வெடகாரயோ என்பது தொழில்நுட்பம் சார்ந்த உலகில் யோசனைகள் மற்றும் விழிப்புணர்வுகளை பகிர்வது மீது நம்பிக்கை கொண்டுள்ள தொழில்நுட்பம் சார்ந்த ஆர்வலர்களை கொண்ட குழுவாகும்.
இக்குழுவானது தொழில்நுட்ப உலகின் வளர்ச்சி தொடர்பான கருத்துக்களை எழுதுதல் விவாதித்தல் மற்றும் பகிரல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன்,இலங்கையின் நேரடி மற்றும் நேரடியற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் மீது அக்கறை காட்டி வருகிறது. 2013 ஜுன் மாதம் ரஜித்த தனன்ஜயவினால் ஸ்தாபிக்கப்பட்ட அன்ட்ரொயிட் வெடகாரயோ ஆனது ஒரு முகநூல் குழுவாக அமைந்துள்ளது.
தொழில்நுட்ப கரிசணை மற்றும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட இலங்கையை நோக்கி பங்களிப்பு வழங்கல்’ என்பது பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளதுடன்‘சிங்களம்’ இனை தமது தாய்மொழியாகக் கொண்ட பெரும்பாலான இலங்கையர்களே இக்குழுவின் பிரதான இலக்கு வாடிக்கையாளர்களாக அமைந்துள்ளனர்.

Hot Topics

Related Articles