அவுஸ்திரேலிய ஓபனில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் நடைபெற்றது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா – செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்டை நடத்தினர்.
இதில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஜப்பான் வீராங்கனை ஒருவர் டென்னிஸ் தரவரிசையில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.
பெட்ரா கிவிட்டோவா 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த சிமோனா ஹாலெப் இரண்டு இடங்கள் சரிந்து 3 ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.