உலகம்

நடாலை வீழ்த்தி சம்பியனானார் ஜோகோவிச்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடாலை வீழ்த்தி, ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை வென்றார்.


அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.

ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.


அவுஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles