அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலம் லூசியானாவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய காதலனை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.
எலிசபெத் தேரியட் மற்றும் கெய்த் தேரியட். 51 வயது நிறைந்த இந்த தம்பதியின் மகன் 21 வயதுடைய டகோட்டா தேரியட் ஆகியோர் அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவின் கொன்சாலெஸ் நகரில் வசித்து வந்தனர்.
டகோட்டா தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த பொலிசார் அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர்களை சுட்டது டகோட்டா என பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், டகோட்டாவின் பெற்றோர் உயிரிழந்து விட்டனர்.
இதேபோன்று அருகே உள்ள மற்றொரு பகுதியில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பில்லி எர்னெஸ்ட் (வயது 43), டேனர் எர்னெஸ்ட் (வயது 17) மற்றும் சம்மர் எர்னெஸ்ட் (வயது 20) என தெரிய வந்துள்ளது.
இவர்களில் ஒருவர் டகோட்டாவின் காதலி என கூறப்படுகிறது.
இந்த கொலைகளை செய்து விட்டு டகோட்டா தப்பி சென்றுள்ள நிலையில், பொலிசார் டகோட்டாவை தேடிவருகின்றனர்.