உலகம்

பாகிஸ்தான் செல்ல மறுக்கும் மேற்கிந்தியத்தீவுகள் பெண்கள் அணித் தலைவி

மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் கிரிக்கெட் அணி தலைவி ஸ்டெஃபானி டெய்லர் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார்.


மேற்கிந்தியத்தீவுகள் பெண்கள் அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவியான ஸ்டெஃபானி டெய்லர் பாதுகாப்பு காரணம் காட்டி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் இருபதுக்கு – 20 போட்டி ஜனவரி 31 ஆம் திகதியும் 2 ஆவது போட்டி பெப்ரவரி மாதம் முதலாம் திகதியும் 3 ஆவதும் இறுதியுமான போட்டி பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. மூன்று போட்டிகளும் பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற இருக்கிறது.

 

Hot Topics

Related Articles