உலகம்

லாராவை பின்னுக்குத்தள்ளிய கோலி

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் லாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி.


நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 23 ஆம் திகதி நேப்பியரில் நடைபெற்றது.

இதில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 45 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 10,430 ஓட்டங்கள் குவித்துள்ளார். 21 ஓட்டங்களை எடுத்தபோது, அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 10405 ஓட்டங்களுடன் 10 ஆவது இடத்தில் இருந்த லாராவை முந்தினார்.

சச்சின் டெண்டுல்கர் 18426 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். குமார் சங்ககரா 14234 ஓட்டங்களுடன் 2 ஆவது இடத்திலும், ரிக்கி பொண்டிங் 13707 ஓட்டங்களுடன் 3 ஆவது இடத்திலும், ஜெயசூர்யா 13430 ஓட்டங்களுடன் 4 ஆவது இடத்திலும், 12650 ஓட்டங்களுடன் ஜெயவர்தனே 5 ஆவது இடத்திலும், 11739 ஓட்டங்களுடன் இன்சமாம் உல் ஹச் 6 ஆவது இடத்திலும், கலீஸ் 11579 ஓட்டங்களுடன் 7 ஆவது இடத்திலும், 11363 ஓட்டங்களுடன் கங்குலி 8 ஆவது இடத்திலும், 10889 ஓட்டங்களுடன் டிராவிட் 9 ஆவது இடத்திலும் உள்ளனர். தற்போது 10430 ஓட்டங்களுடன் விராட் கோலி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார். NZvIND, ViratKohli

 

Hot Topics

Related Articles