உலகம்

பும்ரா உலகின் தலைசிறந்த ஜோக்கர் பந்துவீச்சாளர் – வாசிம் அக்ரம் புகழாரம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, உலகின் தலைசிறந்த ஜோக்கர் பந்துவீச்சாளர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் அணித் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஜோக்கர் பந்து வீசுவதில் சிறப்பாக உள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பும்ரா கடைசி கட்ட பந்துவீச்சில் பெரிய வித்தியாசத்தையும், தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்துவார்.

அவர் ஏனைய வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து வித்தியாசமான பாணியில் பந்து வீசுகிறார். பும்ராவின் சிறப்பே அவர் சாதாரணமாக ஜோக்கர்களை வீசும் திறமை பெற்று இருப்பதுதான். வக்கார் யூனிஸ் போன்று ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியிலும் ஜோக்கர் பந்து வீசுகிறார்.

அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது மிகப்பெரிய சாதனையாகும். பலவீனமான அவுஸ்திரேலிய அணியை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. உண்மையில் இந்திய அணியினர் முழு திறமையை வெளிப்படுத்தினர் என வாசிம் அக்ரம் மேலும் தெரிவித்தார்.

Hot Topics

Related Articles