உலகம்

இளவரசி மேகனுக்கு பிறக்கும் குழந்தைக்கு பிரியங்க சோப்ரா ஞானத்தாய் ?

இங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கவுள்ள குழந்தைக்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை ஞானத்தாயாக அமர்த்த பரிசீலித்து வருவதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 34). இவர் தனது காதலி மேகனை (37) கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி கரம்பிடித்தார்.

இந்நிலையில், தற்போது இளவரசி மேகன் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு வரும் மே மாதம் குழந்தையைப் பிரசவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிறிஸ்தவ மத முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டும் ஞானஸ்நான நிகழ்ச்சியின்போது, குழந்தையின் ஞானத்தாய், தந்தை யாக யார் இருக்கப்போகிறார்கள் என்ற கேள்வி சூடுபிடித்து வருகிறது.

முதலில் ஹரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதியர்தான், இளவரசி மேகன் பெற்றெடுக்கப்போகிற குழந்தையின் ஞானப்பெற்றோர் என கூறப்பட்டது. பின்னர் மேகனின் தோழி ஜெசிகா முல்ரோனியும், அவரது கணவரும் என பேசப்பட்டது.

ஆனால் இப்போது மேகன், தனது பிரியத்துக்கு உரிய தோழியான இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை ஞானத்தாயாகவும், நிக் ஜோனாஸ்ஸை ஞானத்தந்தையாகவும் அமர்த்திக்கொள்ள பரிசீலிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ போல்கே தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இளவரசர் ஹாரி, மேகன் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles