உலகம்

டோனியை புகழ்ந்து தள்ளும் கோலி

இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது. இந்திய அணிக்காக அவர் நிறைய பங்களிப்பு அளித்து இருக்கிறார் என்று இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணித் தலைவர் விராட் கோலி கூறுகையில்,
‘இது துடுப்பாட்டத்திற்கு சிறந்த ஆடுகளம் அல்ல. அதனால் நிலைத்து நின்று ஆட வேண்டியிருந்தது.

இறுதிக் கட்டத்தில் நாங்கள் கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும், டோனி, ஜாதவ் ஜோடியினர் சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டனர்.

டோனியை நினைத்து ஒரு அணியாக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் இந்த தொடரில் கணிசமான ஓட்டங்களை எடுத்து இருக்கிறார்.

எப்போதும் ஓட்டம் குவிக்கும்போது, அது பழைய நிலைக்கு திரும்பி, நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.

டோனி குறித்து வெளியில் நிறைய பேசுகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது என்பதை நாங்கள் அறிவோம்.

டோனி குறித்து வெளியில் நிறைய பேசுகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது என்பதை நாங்கள் அறிவோம்.

இந்திய அணிக்காக அவர் நிறைய பங்களிப்பு அளித்து இருக்கிறார். மிகவும் புத்திசாலித்தனமான ஒரு கிரிக்கெட் வீரர். அணிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவரை, அவரது போக்கிலேயே விட்டுவிட வேண்டும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Hot Topics

Related Articles