இந்தியாவின் ஒடிசாவில் திருமணம் செய்து கொண்ட இரண்டு இளம்பெண்கள் தங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சபித்ரி பரிடா (வயது 27), மோனலிசா நாயக் (28) ஆகிய 2 பெண்கள் தொழில் செய்து வருகின்றனர்.
கல்லூரியில் படிக்கும் போதே தோழிகளாக இருந்த இவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தனர்.
இணைபிரியா தோழிகளான இருவரும் கட்டாக்கில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அண்மையில், இந்திய உயர் நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று தீர்ப்பளித்து உள்ளது. இதையடுத்து சபித்ரியும், மோனலிசாவும் அரசு வக்கீல் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.
இதை அவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.