உலகம்

அம்மாவாகும் சமந்தா…?

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சமந்தா கர்ப்பமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.


‘பாணா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா.

நான் ஈ, அஞ்சான்,கத்தி, தெறி, 24, மெர்சல், இரும்பு திரை, சீமராஜா என பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார் சமந்தா.

இவருக்கும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

நாகசைதன்யாவின் தந்தை தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, திருமணமான பிறகும் சமந்தாவின் நடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கணவரான நாக சைதன்யாவின்ஆதரவும் இருந்ததால் திருமணத்திற்கு பிறகும் சமந்தா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார்.

திருமணத்திற்கு பிறகு கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமான ‘யூ டேர்ன்’ என்ற படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அவர் படபிடிப்பில் இருந்தாலும் இணையதள பயன்பாட்டில் ஆர்வம் காட்டுபவர். அதனால் அவர் அண்மையில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியிருந்தார். அந்த புகைப்படத்தை பார்வையிட்ட அவரது ரசிகர் ஒருவர், ‘நீங்கள்.அம்மாவாக போகிறீர்களா..?’ என கேட்க, அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் அமைதி காத்திருக்கிறார் சமந்தா.

இதன் மூலம் அவர் விரைவில் தாயாகப் போகிறார் என்ற செய்தி வெளியானது. இதனை மறுக்க வேண்டிய சமந்தா இதுவரை மறுப்புதெரிவிக்கவில்லை. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சமந்தா தாயாகப் போகிறார் என்கிறார்கள் திரையுலகினர்.

நடிகை சமந்தா தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ்என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles