உலகம்

பெண்கள் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா மன்னிப்புக் கோரினார் : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் ஆபத்து

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தமைக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார்.


இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர்.

பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இவ்விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது.

இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இதற்கிடையே என்னுடைய கருத்துகள் எந்த வகையிலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் அவமதிக்க வேண்டும் என்பதோ, யாருடைய மனதையும் காயப்படுத்த வேண்டும் என்பதோ எனது நோக்கமில்லை என்று ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த சர்ச்சை எதிரொலியாக கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் சபை ஆலோசனை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles