தனது அந்தரங்கப்படங்களை தனது அனுமதியின்றி இணையத்தில் பதிவிட்டதால் தனது கணவரை விவாகரத்து செய்ததாக நடிகை பிரியங்கா நாயர் தெரிவித்துள்ளார்.


வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் ‘தங்கம்’ என்ற கேரக்டரில் பிரியங்கா நாயர் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பின் பல தமிழ், மலையாள படங்களில் அவர் நடித்து வந்த நிலையில் இவர், கடந்த 2012ஆம் ஆண்டு லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களது மணவாழ்க்கை மூன்றே வருடங்களில் முடிவுக்கு வந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை பிரியங்கா நாயர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஒரே மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

விவாகரத்துக்கு பின் பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தனது விவகாரத்துக்கான காரணத்தை நான்கு ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரியங்கா நாயர் மனம் திறந்துள்ளார்.

தனது அந்தரங்கப் படங்களை தன் அனுமதியில்லாமல் இணையத்தில் வெளியிட்டு, தன்னை களங்கப்படுத்திய காரணத்தால்தான், தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன் என்று நடிகை பிரியங்கா தெரிவித்துள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here