உலகம்

கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு : 7 பேர் பலி

மெக்சிகோவிலுள்ள கேளிக்கை விடுதியில் இனந்தெரியாத மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மெக்சிக்கோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன். இங்கு உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக மெக்சிக்கோ பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hot Topics

Related Articles