உலகம்

இலங்கையின் வடக்கு ஆளுநருக்கும் சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பு

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பு (08-01-2019) மாலை இரா.சம்பந்தனின் கொழும்புவாசஸ்தலத்தில் இடம்பெற்றது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வடக்கிற்கான ஆளுநராக நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட கலாநிதி சுரேன் ராகவனின் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இச்சந்திப்பு அமைந்திருந்தது.

இந்தத சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles