உலகம்

நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி தனது சொந்த ஊரான இலங்கையின் யாழில்

இலங்கைத் தமிழரான நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துக்கும் மகளிர் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இலங்கை கொள்கைகளுக்கான பேரவையின் ( Centre for Public Policies) ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாணத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் பிரவேசம், ஈழத் தமிழர்களின் போருக்குப் பின்னரான நிலைப்பாடு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணம் இலங்கையில் பிறந்து, தனது மூன்றாவது வயதில் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்தவராவார்.

தமிழ் இளைஞர் அமைப்பில் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்கான நிகழ்வுகளை நடாத்தியதோடு, இன அடக்கு முறைக்கெதிரான இளையோர் அமைப்பின் உப தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

2015 அக்டோபர் மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டு, நோர்வேயின் மிக வயது குறைந்ந பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Hot Topics

Related Articles